ஐ.நா. எக்ஸ் தளம்
உலகம்

ரஷ்யா - உக்ரைன் போர் | 107 நாடுகள் ஆதரவு.. ஐ.நா. சபையில் வாக்களிக்காத இந்தியா!

ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த அழைப்புவிடுத்து ஐ.நா. சபையில் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

Prakash J

ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த அழைப்புவிடுத்து ஐ.நா. சபையில் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீரமானம் 107 நாடுகள் ஆதரவளித்த வாக்குகளால், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த அழைப்புவிடுத்து ஐ.நா. சபையில் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஐ.நா.

’உக்ரைனில் நீடித்த அமைதிக்கான ஆதரவு' என்ற தலைப்பில் உக்ரைன் அறிமுகப்படுத்திய இந்த தீர்மானத்துக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், போலந்து உள்பட 107 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. ஆனால் ரஷ்யா, ஈரான், கியூபா உள்பட12 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா, அமெரிக்கா, பக்ரைன், வங்காளதேசம், பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 51 நாடுகள் புறக்கணித்தன. எனினும், உக்ரைனின் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் தீர்க்கமான பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பு உக்ரைனுக்கான உலகளாவிய ஆதரவு பிப்ரவரி 2025 இல் இருந்ததைவிட வலுவாக உள்ளது என்பதையும், தார்மீக தெளிவு சீராக வளர்ந்து வருவதையும் உறுதிப்படுத்துகிறது. மேலும் இந்தத் தீர்மானம், உடனடி, முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது.உக்