ஐ.நா. அறிக்கையை அதிகம் யாரும் படிப்பதில்லை முகநூல்
உலகம்

ஐ.நா. அறிக்கையை அதிகம் யாரும் படிப்பதில்லை... வெளியான அதிர்ச்சி தகவல்!

ஐ.நா. சபையின் அறிக்கைகளை யாரும் அதிகம் படிப்பதில்லை என ஐ.நா.வின் புதிய அறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

PT WEB

ஐ.நா. சபையின் அறிக்கைகளை யாரும் அதிகம் படிப்பதில்லை என ஐ.நா.வின் புதிய அறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை பார்க்கலாம்.

கடந்த ஆண்டு மட்டும் ஐ.நா. சபை 1,100க்கும் மேற்பட்ட அறிக்கைகளை வெளியிட்டது. ஆனால், இதில் 5% அறிக்கைகள் மட்டுமே அதிகபட்சமாக 5,500 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், 20% அறிக்கைகள் 1,000 முறை கூட பதிவிறக்கம் செய்யப்படவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது.

ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்

இதைக் குறிப்பிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இனி குறைந்த எண்ணிக்கையில், ஆனால் தரமான அறிக்கைகளை வெளியிடுவோம் என்றார்.