இங்கிலாந்து எக்ஸ் தளம்
உலகம்

’பெண்ணாகப் பிறந்தவரே பெண்; திருநங்கைகள்..?’ - இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. என்றாலும், பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.

Prakash J

பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. என்றாலும், பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.

சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதாவது, பெண் என்ற வார்த்தைக்குச் சட்டப்படி என்ன பொருள் என்பது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில், 88 பக்கங்களைக் கொண்டு தீர்ப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

model image

அதில், "சமத்துவச் சட்டம் 2010இல் பாலினத்தின் வரையறை விளக்கப்பட்டுள்ளது. ஒருவரது பாலினம், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அது பிறப்பின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரே பாலினத்தைச் சேர்ந்த நபர்களின் உரிமையைப் பாதுகாக்கவே சட்டம் இருக்கிறது. அதன்படி, பெண்களைப் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்கள் அல்லது விதிகள் குறிப்பாக ஆண்களுக்குப் பொருந்தாது.

சமத்துவச் சட்டத்தில் பிறப்பின் அடிப்படையில் என்ற வார்த்தை இல்லை என்றாலும், வழக்கமாக ஒரு நபரை ஆண் அல்லது பெண்ணாகப் பிறப்பின் அடிப்படையிலேயே குறிப்பார்கள். அந்த பயோலஜிக்கல் பண்புகள் அடிப்படையிலேயே குறிப்பார்கள். எனவே, இந்த விவகாரத்தில் வேறு எந்த விளக்கமும் தேவையில்லை. ஆண்களும் பெண்களும் பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்தப்படுகிறார்கள். எனினும், சமத்துவச் சட்டம் 2010 திருநங்கைகளுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.