அபிரகாம் லிங்கன், ஜார்ஜ் வாஷிங்டன் போன்ற வரலாற்றுச் சிறந்த அதிபர்களை விட தானே அமெரிக்காவின் சிறந்த அதிபர் என டொனால்ட் ட்ரம்ப் தன்னை முதன்மைப்படுத்தி பட்டியல் வெளியிட்டுள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில் முன்னாள் அதிபர்களின் புகைப்படங்களுடன் வெளியிட்ட இந்த பதிவில், ஒபாமா, ஜோ பைடன் ஆகியோரை தோல்வியடைந்தவர்கள் என குறித்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டனை விட தானே அமெரிக்காவின் சிறந்த அதிபர் என டொனால்ட் ட்ரம்ப் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அதிபர்கள் புகைப்படங்களுடன் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள ட்ரம்ப், லிங்கன், வாஷிங்டன் போன்ற வரலாற்றுத் தலைவர்களை 'சிறந்தவர்கள்' என பட்டியலிட்டுள்ளார். ஒபாமா, ஜோ பைடன் ஆகியோரை 'தோல்வியடைந்தவர்கள்' என வரிசைப்படுத்தி உள்ளார்.
முன்னாள் அதிபர்களான ரீகன், கென்னடி போன்ற பல முக்கியத் தலைவர்களின் பெயர்களைப் பட்டியலில் புறக்கணித்துவிட்டு தன்னை முதன்மைப்படுத்தியுள்ள ட்ரம்பின் இந்த விசித்திரமான விவரிப்பு உலக அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.