Trump & Pete Hegseth  X
உலகம்

ஈரான் போருக்கு காரணம் இவர்தான்.. பென்டகன் தலைவர் மீது பழி சுமத்திய ட்ரம்ப்.!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான போரை தொடங்குமாறு கூறியவர் தனது பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் தான் என்று குற்றம் சாட்டியுள்ளார். இது அமெரிக்காவில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.

PT WEB

ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேல் போர் 4-வது வாரத்தை எட்டியிருக்கும் நிலையில், ஈரானுக்கு எதிராக போர் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு முதலில் கூறியவர் தனது பாதுகாப்புச் செயலாளர் ஹெக்ஸெத் தான் என்று திங்களன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று, மெம்பிஸ் பாதுகாப்புப் பணிக்குழுவின் வட்டமேசை மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப், ஈரான் மீதான கண்காணிப்பு தீவிரமடைந்தபோது, ​​ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களைத் தொடங்குமாறு கூறியது தனது பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் தான் என்று பழி சுமத்தியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

Pete Hegseth

ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையை நிர்வாகத்திற்குள் யார் முன்னெடுத்தார்கள் என்பது குறித்து அதிகாரிகளும் ஆய்வாளர்களும் வாஷிங்டனில் விவாதித்து வருகின்றனர். முன்னதாக, துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், தன்னைவிட இந்தப் போரில் ஆர்வம் இல்லாதவராக இருந்தார் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக் ஆகியோர் ஈரானில் போர் தொடுக்க வேண்டும் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை ஒன்று கூறுகிறது அதேசமயம் வேன்ஸ், வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் தலைமைப் பணியாளர் சூசி வைல்ஸ் ஆகியோர் போர் குறித்து அதிக சந்தேகத்துடன் இருந்தனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது

JD vance & Trump

கடந்த வாரம், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் முன்னாள் தலைவர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான நிர்வாகத்தின் இராணுவ நடவடிக்கையைத் தன்னால் மனசாட்சிக்கு விரோதமாக ஆதரிக்க முடியாது. ஈரான் அமெரிக்காவுக்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. மேலும் இஸ்ரேலின் அழுத்தத்தின் காரணமாகவே அமெரிக்கா இந்தப் போரைத் தொடங்கியுள்ளது என்றும் குற்றம் சாட்டி தனது பதவியை ராஜினாமா செய்தது பேசு பொருளானது . இந்த நிலையில் போரை தொடங்க கூறியது பீட் ஹெக்செத்தான் என்று ட்ரம்ப் கூறியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது .