கொலம்பியா ராணுவ விமானம் விபத்து.. 66 வீரர்கள் உயிரிழப்பு.. பலர் கவலைக்கிடம்.!
கொலம்பியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 66 வீரர்கள் உயிரிழந்தனர். சி-130 ஹெர்குலஸ் விமானம் புவேர்ட்டோ பகுதியில் இருந்து புறப்பட்டு 1.5 கிமீ தொலைவில் விபத்துக்குள்ளானது
கொலம்பியாவில் ஈக்வடார் மற்றும் பெரு எல்லைக்கு அருகில் உள்ள புவேர்ட்டோ பகுதியில் இருந்து 125 ராணுவ வீரர்களுடன் சி-130 ஹெர்குலஸ் என்ற விமானம் புறப்பட்டது. அப்போது ஓடுதளத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் பயணித்த அந்த விமானம் சில நிமிடங்களிலேய விபத்துக் குள்ளானது. இது குறித்து தெரிவித்த அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பெட்ரோ சான்செஸ், ராணுவ விமானம் பயணித்த சில நிமிடங்களிலேயே விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இத்தீவிபத்தின் காரணமாக விமானத்தில் இருந்த எரிபொருள்கள் வெடித்துச் சிதறியதன் காரணமாக சேதம் அதிகரித்திருக்கிறது. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழலில் தான், இந்த விபத்தில் இதுவரை 66 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்றும் காயமடைந்திருக்கும் பலர் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. முன்னதாக, இந்த விபத்து வனப்பகுதில் நிகழ்ந்ததால் மீப்புபணியாளர்கள் அந்த இடத்திற்கு ஆரம்பத்தில் செல்வதில் சிரமம் ஏற்பட்டிருந்தது. இந்த சூழலில் தான், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்றன.

