அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜென்சென் ஹுவாங் குறித்து பாராட்டியதுடன், சீனாவிலிருந்து வரும் பெண்கள் குறித்தும் பேசியுள்ளார். ஹுவாங் மிகுந்த திறமையானவர் என்றும், அவரைப் போன்றவர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
செய்தியாளர் - M.மீரா
என்விடியா நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங் தொடர்பான சர்ச்சை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். “சீனாவிலிருந்து வரும் அழகான பெண்கள் அனைவரையும் உளவாளிகள் என்று கருதுகிறார்கள்” என அவர் கூறியுள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்த பிறகு ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது ஜென்சென் ஹுவாங் விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டிரம்ப், “அவர் மிகவும் திறமையான மனிதர். அவரைப் போன்ற அறிவாளிகளை நாம் பாதுகாக்க வேண்டும். அவருக்கு மாற்றாக வேறு ஒருவரைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. அவர் மற்றவர்களைவிட 10 ஆண்டுகள் முன்னால் இருந்தார் என்று பாராட்டினார்.
மேலும், ஹுவாங்கின் தனிப்பட்ட உறவு விவகாரம் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா என்று கேட்கப்பட்டது. அதற்கு, அந்தப் பெண் "உளவாளி" என்று தாம் கேள்விப்படவில்லை எனக் கூறிய டிரம்ப், அவரை அழகான பெண் என்றும் வர்ணித்தார்.
ஆலிஸ் ஹுவாங் என்ற அந்தப் பெண், சிங்கப்பூரைச் சேர்ந்த மெகாஸ்பீட் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர். என்விடியாவின் அதிநவீன சிப்களைப் பயன்படுத்தி சீனாவுக்கு உதவியதாக அந்த நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சர்ச்சைக்கு மத்தியில், ஜென்சென் ஹுவாங் என்விடியா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.