சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோரை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் பணியில் ஸ்பேஸ் எக்ஸ் இறங்கியுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், உலகின் பணக்காரரான எலன் மஸ்க் உடன் நல் உறவை பேணி வருகிறார். அதன்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோரை பூமிக்கு திரும்பி அழைத்து வர எலன் மஸ்கிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்பதாக கூறியுள்ள எலன் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் இருவரையும் பூமிக்கு அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.