சிறுகோள்
சிறுகோள்புதியதலைமுறை

பூமியை நோக்கி பாய்ந்து வரும் ‘2024 YR4 சிறுகோள்’.. 2032-ல் தாக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

2032ல் சிறுகோளானது பூமியைத் தாக்க 1.2% வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்பொழுது சூரிய குடும்பத்தை சுற்றி வரும் இந்தசிறுகோள், 2028ல் மீண்டும் பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும் என்கிறார்கள்.
Published on

2032ல் பூமியைத் தாக்குவதற்கு வேகமாக வரும் சிறுகோள்... ஆபத்தை தடுப்பார்களா விஞ்ஞானிகள்? அவர்கள் கூறுவது என்ன?

Asteroid Terrestrial-Impact Last Alert System (ATLAS) சிறுகோள் ஆய்வாளர்கள், விண்வெளியில் சிறுகோள்களைப்பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த சமயம் 2024 டிசம்பர் 27 அன்று பூமியிலிருந்து சுமார் 8,29,000 கி.மீ தொலைவில் சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வேகமாக வந்துக்கொண்டிருந்ததை கண்டறிந்தனர்.

asteroid
asteroid

இந்த சிறு கோளுக்கு ஆய்வாளார்கள் 2024 YR4 என்று பெயரிட்டு அதன் மீது கவனத்தை செலுத்தினர். சுமார் 196 அடி விட்டம் கொண்ட இந்த 2024 YR4 சிறுகோளின் பாதையை கவனிக்கையில், 2032ல் இந்த சிறுகோளானது பூமியைத் தாக்க 1.2% வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்பொழுது சூரிய குடும்பத்தை சுற்றி வரும் இந்தசிறுகோள், 2028ல் மீண்டும் பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும் என்றும் 2032ல் பூமியை தாக்கக்கூடும் என்று கூறுகின்றனர்.

2024 YR4 சிறுகோள் பூமியைத் தாக்கினால் பெரியளவு பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றாலும், மோதலில் பூமியின் மீது சுமார் 8 மெகா டன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.

அதாவது, 8 மெகா டன் ஆற்றல் என்பது 1945ல் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுட்டு ஆற்றலை விட 500 மடங்கு அதிகம். எனினும், ஆய்வாளர்கள் விண்வெளியில் சிறுகோள் மீது மோதலை ஏற்படுத்தி இதன் பாதையை நகர்த்தவும் யோசித்து வருகின்றனர்.

இப்போதைக்கு, சாத்தியமான தாக்கத்தின், சாத்தியமான அபாயங்கள் மற்றும் விளைவுகளை நன்கு புரிந்துகொள்ள வானியலாளர்கள் 2024 YR4 இன் சுற்றுப்பாதை மற்றும் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com