microsoft x page
உலகம்

MICROSOFT-க்கு வந்த சோதனை ! என்ன நடந்தது? எப்படி நடந்தது?

NETWORK மேம்பாட்டில் ஏற்பட்ட குறைபாடு: மைக்ரோசாஃப்ட் சேவைகள் சீரமைப்பு

PT WEB

மைக்ரோசாஃப்ட் சேவைகள் தொழில்நுட்பக் கோளாறால் 24 மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டன. Exchange Online சேவையில் ஏற்பட்ட கோளாறு மற்ற சேவைகளையும் பாதித்தது. மைக்ரோசாஃப்ட் தீவிர முயற்சியால் சேவைகள் மீண்டும் சீராகியுள்ளன. கோளாறின் காரணம் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.

செய்தயாளர் - வெற்றிச்செல்வி

2 நாட்களாகத் தொழில்நுட்பக் கோளாறுகளால் முடங்கி உலகையே ஸ்தம்பிக்க வைத்த மைக்ரோசாஃப்ட்... தற்போது மீண்டும் சீராகியுள்ளது . இந்தப் பெரும் பாதிப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட்டின் பல்வேறு சேவைகள் கடந்த 13 ஆம்தேதியன்று தொழில்நுட்பக் கோளாறுகளால் முடங்கியது. உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் பயன்படுத்தும் OUTLOOK, EXCHANGE ONLINE , TEAMS , SHAREPONIT , MICROSOFT365 , CAPILOT 635, போன்ற சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. Downdetector இணையதளத்தில் 70க்கும் அதிகமான நாடுகளில் இருந்து சுமார் 1.3 லட்சம் புகார்கள் பதிவாகி உள்ளன. இதனால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

microsoft server issue

இந்தக் கோளாறில் முதலில் பாதிக்கப்பட்டது Exchange Online என்ற மைக்ரோசாஃப்ட் சேவைதான். இது மின்னஞ்சல் சேவைகளை இயக்குவதற்கான முக்கியத் தொழில்நுட்ப அமைப்பாகும். அதாவது, Outlook மூலம் மின்னஞ்சல்களை அனுப்புவது, பெறுவது, சந்திப்புகளுக்கான அழைப்புகளை நிர்வகிப்பது போன்ற பணிகள் இதன் மூலம்தான் நடைபெறுகின்றன.

இந்த அடிப்படைச் சேவையில் கோளாறு ஏற்பட்டதால், அதைச் சார்ந்து இயங்கும் Microsoft 365, Teams, SharePoint, Copilot உள்ளிட்ட மற்ற சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.

ஆனால் எல்லா சேவைகளும் இதனால் முடங்காமல் EXCHANGE ONLINE ஐ சார்ந்த அம்சங்களில் மட்டும்சிக்கல் ஏற்பட்டது. இந்தக்கோளாறு எப்படி உருவானது என்பதையும் நிறுவனம் விளக்கி இருக்கிறது. ஏற்கெனவே NETWORK-ன் திறனை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணியில் ஒரு தொழில்நுட்பக்கோளாறு இருந்துள்ளது. சமீபத்தில் செய்யப்பட மற்றொரு NETWORK மாற்றத்தின் போது அந்த குறைபாடு வெளிப்பட்டிருக்கிறது.

microsoft

பாதிக்கப்பட்ட சர்வர்களில் பயனர்கள் இணையம் வழியாக இணைவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த சர்வர்களால் மின்னஞ்சல் உள்ளிட்ட சேவைகளுக்கான கோரிக்கைகளைப் பெறவும், அதற்குப் பதிலளிக்கவும் முடியவில்லை. இதனால் சில சர்வர்கள் செயலிழந்து அவற்றின் வேலைகள் மற்ற சர்வர்களுக்குச் சென்றதால், மற்ற சர்வர்களும் அதிகப்படியான பணிச்சுமைக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் மைக்ரோசாஃப்ட் சேவைகளின் பாதிப்பு மேலும் அதிகரித்தது.

முடங்கிய சேவைகளை மீட்டெடுக்க மைக்ரோசாஃப்ட் தீவிரமாகப் பணியாற்றியது. முதலில் செயலிழந்த சர்வர்களை மீண்டும் இயக்கவும், அவற்றின் பணிச்சுமையைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஆரம்பகட்ட முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இதனால் அவசரமாக அனைத்து சேவைகளையும் ஒரே நேரத்தில் மீட்டெடுக்காமல், ஒவ்வொரு சேவையாகச் சீரமைத்து, அவை தடையின்றி இயங்குவதை உறுதிப்படுத்திய பிறகே அடுத்த கட்டத்துக்குச் சென்றது.

microsoft

இந்தச் சம்பவம் சைபர் தாக்குதலாலோ, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தாலோ ஏற்படவில்லை என்றும் மைக்ரோசாஃப்ட் தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்பட்ட பாதிப்புக்கு வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன், கோளாறின் முழுமையான காரணம் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளது. சுமார் 24 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்தப் பாதிப்பைச் சரிசெய்து, நவம்பர் 14ஆம் தேதி முதல், சேவைகள் மீண்டும் சீராக இயங்குவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்தது.