\
MICROSOFT
MICROSOFT REUTERS

“Monday வரை சரி ஆகக்கூடாது!” மீம் க்ரியேட்டர்களிடம் சிக்கிய Microsoft.. என்ன நடந்தது?

Microsoft சேவைகள் முடங்கியதால் உலகம் முழுவதும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்தத் தடையை வைத்து நெட்டிசன்கள் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
Published on: 

செய்தியாளர் : வெற்றிச்செல்வி

உலகின் முன்னணி டெக் நிறுவனமான Microsoft-க்கே இப்படியொரு சோதனையா? தொழில்நுட்பக் கோளாறால் உலகம் முழுவதும் அதன் சேவைகள் முடங்கி பயனாளர்களின் அன்றாடப் பணிகள் அத்தனையும் ஸதம்பித்து விட்டன.

ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நெட்டிசன்களுக்கு எப்போதுமே குறும்புதான் என்பது போல, விதவிதமான மீம்ஸ்களைப் போட்டு சமூக வலைதளங்களையே கலகலக்க வைத்திருக்கிறார்கள்.

microsoft server issue
microsoft server issue x - 𝐓𝐡𝐞 𝐓𝐫𝐮𝐭𝐡 𝐇𝐮𝐧𝐭𝐞𝐫𝐬

Microsoft சேவைகளில் நேற்று தொடங்கிய தொழில்நுட்பக் கோளாறு, நவம்பர் 13 வெள்ளிக்கிழமை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியது. இதனால் Outlook, Teams உள்ளிட்ட முக்கிய சேவைகள் பாதிக்கப்பட்டு, உலகம் முழுவதும் பயனாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனால் Microsoft-ன் Outlook, Microsoft Teams, Copilot, Microsoft 365, SharePoint, OneDrive எனப் பல சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அலுவலக ஊழியர்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்தப் பிரச்சினையால் Microsoft சேவைகளுடன் இணைந்து செயல்படும் OpenAI மற்றும் Anthropic நிறுவனங்களின் Microsoft 365 Connectors-லும் சிக்கல் ஏற்பட்டது.

ஆனால், இந்தப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் நெட்டிசன்கள் கவலையே படாமல் SOCIAL MEDIA-வில் மீம்ஸ்களைக் குவித்து வருகின்றனர். மிகவும் பரபரப்பான சூழலில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு ஓய்வு கிடைப்பது போல, இந்தத் தொழில்நுட்பக் கோளாறைக் கொண்டாடி வருகின்றனர்.

பள்ளிப் பருவத்தில் மழைக்காலத்தில் காலையிலேயே எழுந்து TV முன்னாடி அமர்ந்து, இன்னைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்ததும் வரும் மகிழ்ச்சி இருக்கிறதே... அதேபோல, Microsoft நிறுவனத்தின் இந்தத் திடீர் முடக்கம் குழந்தைப் பருவ நினைவுகளைத் தூண்டியிருப்பதாகப் பகிர்ந்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், Dear Microsoft... உனக்கும் ஓய்வு வேண்டும், உனக்கும் pressure இருக்கும்-ல... உனக்கான time எடுத்துக்கோ, பொறுமையா சரி பண்ணினால் போதும். உன்னுடைய mental health-ஐயும் பார்த்துக்கோ... Happy Friday all என்று Microsoft நிறுவனத்துக்கே அட்வைஸ் பண்ணிட்டு இருக்காங்க!

மேலும், "Microsoft Outlook is down and it's Friday today" என்ற வரிகளும் social media-வில் தீயாகப் பரவிக்கொண்டிருக்கிறது. அதாவது, இன்னைக்கு Microsoft down... அதுவும் இன்னைக்கு Friday... தொடர்ந்து மூன்று நாட்கள் ஓய்வு கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

microsoft
microsoft reuters

அதுமட்டுமில்லை, Monday வரைக்கும் இந்தப் பிரச்சினையைச் சரி செய்யக்கூடாது என்று தீவிரமாகப் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.

என்ன பிரச்சினைகள் வந்தாலும் நெட்டிசன்களுக்கு எப்பொழுதும் சேட்டைதான் போல, சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துகளை மீம்ஸ்களாகக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

எது எப்படியோ... இந்தப் பிரச்சினை குறித்து Microsoft நிறுவனமும் பதில் அளித்திருக்கிறது. இந்தச் சேவை முடக்கத்துக்குப் பின்னால் சைபர் தாக்குதலோ அல்லது தீங்கிழைக்கும் இணையச் செயல்பாடுகளோ இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு வருத்தம் தெரிவித்த Microsoft நிர்வாகி சார்லஸ் லமன்னா, சேவைகளை மீண்டும் சீரமைக்கத் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சில சர்வர்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு அவற்றின் செயல்பாட்டில் முன்னேற்றம் இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எது எப்படியோ, Microsoft-க்கு இது சர்வர் பிரச்சினை, ஆனால் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை கிடைத்த எதிர்பாராத ஜாக்பாட் தான்.