தெருநாய்கள் pt web
உலகம்

கால்பந்து உலகக்கோப்பையால் 30 லட்சம் தெரு நாய்களின் உயிர்களுக்கு ஆபத்து? வெளியான அதிர்ச்சி தகவல்!

உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு, மொராக்கோ நாட்டில் 30 லட்சம் நாய்கள் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு, மொராக்கோ நாட்டில் 30 லட்சம் நாய்கள் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2030 ஆண்டு கால்பந்து உலக கோப்பை தொடர், ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோ ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதனையொட்டி, இந்த நாடுகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தசூழலில், தங்கள் நாட்டிலுள்ள 30 லட்சம் தெருநாய்களை கொல்லும் நடவடிக்கையில், மொராக்கோ அரசு இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நச்சுத்தன்மை வாய்ந்த ராசாயனத்தை செலுத்தியும், சுட்டும், அடித்தும் நாய்கள் கொலை செய்யப்படுவதாக, அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச விலங்குகள் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான கூட்டமைப்பு, இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல், பிரபல விலங்கு உரிமைகள் வழக்கறிஞருமான ஜேன் குடால், நாய்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டுமென, FIFAவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.