மலேசிய தமிழர் முகநூல்
உலகம்

தூக்கு மேடைக்கு செல்லும் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

தூக்கு மேடைக்கு செல்லும் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்டால் சிங்கப்பூரில் தூக்கு தண்டனை பெற்ற மலேசிய தமிழர் ஒருவர் காப்பற்றப்பட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

திவ்யா தங்கராஜ்

சிங்கப்பூர் சட்டத்தை பொறுத்தவரை ஒருவர் 15 கிராம் ஹெராயினுக்கு மேல் வைத்திருந்து அவர் பிடிபட்டாலே அவருக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்பது நடைமுறையில் இருக்கிறது.

இந்நிலையில், மலேசியாவை சேர்ந்த தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பன்னீர்செல்வம் பரந்தாமன் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டில் 52 கிராம் ஹெராயின் போதை பொருட்களுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு பன்னீர் செல்வத்திற்கு விதிக்கப்பட்டது.

பன்னீர் செல்வம் ஹெராயின் வைத்திருந்தது அவருக்கே தெரியாமல் நடந்ததாகவும், அவர் மூலம் போதை பொருட்களை கடத்த முயற்சி செய்ததாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பன்னீர் செல்வத்தின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தது.

அது மட்டும் இல்லாமல் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தினர். அதோடு இந்த தண்டனையை நிறுத்திவைக்க சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டது.

மரண தண்டனை விதிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதே நேரத்தில் தண்டனைக்கு உள்ளான நபர் நேரடியாக குற்றத்தில் ஈடுபடவில்லை என்ற காரணத்தினாலும் பிப்ரவரி 20 அன்று விதிக்கப்பட இருந்த மரண தண்டனையை நிறுத்திவைக்குமாறு வாதிடப்பட்டது. வாதத்தை ஏற்ற சிங்கப்பூர் நீதிமன்றம் பிப்ரவரி 20 அன்று பன்னீர் செல்வத்திற்கு விதிக்கப்பட இருந்த தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சிறைத்துறைக்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.