விண்கல்
விண்கல்புதியதலைமுறை

2032 டிசம்பர் 22ல் பூமிமீது மோதவுள்ள விண்கல்...

2024 YR4 என்ற அந்த விண்கல்லை தெற்கு கலிஃபோர்னியாவிலிருந்து நாசா விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
Published on

விண்வெளியிலிருந்து மிகப்பெரிய விண்கல் ஒன்று வந்துகொண்டுள்ளதாகவும் இது பூமியில் மோதி பாதிப்புகளை ஏற்படுத்த 1.5% வாய்ப்புகள் உள்ளதாகவும் அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது.

2024 YR4 என்ற அந்த விண்கல்லை தெற்கு கலிஃபோர்னியாவிலிருந்து நாசா விஞ்ஞானிகள் கண்காணித்து
வருகின்றனர். அந்த விண் கல் பூமியின் மோத 3.2% வாய்ப்புகள் உள்ளதாக சில நாட்களுக்கு முன் கூறப்பட்டிருந்தது. இதற்கு முன்னும் விண்கல் விழும் அறிவிப்புகளை நாசா வெளியிட்டிருந்தாலும் தற்போது மோதல் நிகழ மிக அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் 3.2% வாய்ப்பு என அறிவித்ததை தற்போது 1.5% வாய்ப்பு என குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 YR4 விண்கல் இதே வேகத்தில் இதே பாதையில் வந்தால் பூமியின் மீது  2032ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி மோதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com