மோடி - டிரம்ப் உரையாடல் முகநூல்
உலகம்

”இந்தியாவுடனான நட்புறவு எப்போதுமே ஸ்பெஷலானது” - அமெரிக்க அதிபர் டிரம்ப்... வரவேற்கும் மோடி!

இந்தியாவும் அமெரிக்காவும் அண்மைக் காலமாக எதிரும் புதிருமாக இருந்து வந்த நிலையில், இருநாட்டு உறவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

PT WEB

இந்தியாவுடனான நட்புறவு எப்போதுமே ஸ்பெஷலானது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கும் நிலையில் பிரதமர் மோடியும் இணக்கமாக பதில் அளித்திருப்பது  இரு தரப்பு உறவில்
முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா - இந்தியா உறவு

எதிரும் புதிருமாக இருக்கும் இந்தியா - அமெரிக்க உறவு..

அமெரிக்க மற்றும் இந்தியாவிற்கு இடையேயான உறவானது சமீப காலங்களாக எதிரும் புதிருமாக இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் வரிவிதிப்பு கொள்கை குறித்து இந்தியாவை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், 50% இறக்குமதி வரியையும் இந்தியாவின் மீது வித்திருந்தார். தொடர்ந்து, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனைப் புறந்தள்ளிய இந்தியா, ரஷ்யா, சீனாவுடன் மிக நெருக்கம் காட்டியது. தொடர்ந்து, பிரதமர் மோடி சீனாவுக்கும் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், சீனாவிடம், ரஷ்யாவையும் இந்தியாவையும் இழந்துவிட்டதாக ட்ரம்ப் கூறியிருந்தார். இது உலக அரங்கில் அதிர்வை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிரம்பின் தொலைபேசி அழைப்பை மோடி ஏற்கவில்லை என தகவல் வெளியான நிலையில், தொடர்ந்து, பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தையும் ரத்து செய்திருந்தார்.

இவ்வாறு இருக்க, இந்தியாவுடனான நட்புறவு எப்போதுமே ஸ்பெஷலானது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதும், அதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றிருப்பதும் பேசு பொருளாகியிருக்கிறது.

எந்தக் கவலையும் தேவையில்லை 

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுடனான நட்புறவு எப்போதுமே ஸ்பெஷலானது என்றும் மோடி மிகச்சிறந்த பிரதமர் என்றும் அவருடன் நட்பாகவே இருக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போதைய அவருடைய செயல்பாடுகள் மட்டும் எனக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் கூறினார். எனினும் இந்திய, அமெரிக்க உறவுகள் குறித்து எந்த கவலையும் கொள்ளத் தேவையில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

டிரம்ப்பின் இந்த பேச்சு வெளியான சில மணி நேரங்களில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, உங்கள் கருத்தை வரவேற்கிறேன் என்றும் அதையே தானும் எதிரொலிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இந்தியாவும் அமெரிக்காவும் சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, இந்தியாவுடனான நட்புறவு எப்போதுமே ஸ்பெஷலானது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கும் நிலையில் பிரதமர் மோடியும் இணக்கமாக பதில் அளித்திருப்பது  இரு தரப்பு உறவில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.