குன்ஹி கண்ணன்
குன்ஹி கண்ணன் google
உலகம்

ஜெட் வேகத்தில் உயர்ந்த சொத்து மதிப்பு! Forbes பட்டியலில் இணைந்த இந்தியர்! பின்னணியில் சந்திரயான் 3?

Jayashree A

மிக குறுகிய காலத்தில் உலகபணக்காரர்களின் பட்டியலில் இணைந்த இந்தியருக்கு பின்னால் சந்திரயான் 3 இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? ஜெட் வேகம் என்று சொல்வார்கள், ஆனால் அதையும் தாண்டி ராக்கெட் வேகத்தில் இந்தியாவை சேர்ந்த குன்ஹி கண்ணன் என்பவர் உலக பில்லியனர்களில் ஒருவராகி இருக்கிறார்.

அமெரிக்காவின் Forbes பத்திரிக்கை வெளிட்ட Billionaires List ல் எலான் மஸ்க், முகேஷ் அம்பானி, ஜெப்பியாஸ் இவர்களின் வரிசையில் இந்தியாவைச் சேர்ந்த குன்ஹி கண்ணனும் இணைந்துள்ளார்.

யாரிந்த குன்ஹி கண்ணன்? இவரைப்பற்றி பார்க்கலாம்

சமீபத்தில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையான சந்திரயான் 3 செயற்கைகோளானது நிலவில் தரையிறங்கி உலகையே நம்மை திரும்பிப்பார்க்க வைத்தது நினைவிருக்கலாம். அந்த சந்திரயான் 3 விண்கலத்தில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை இஸ்ரோவிற்கு தயாரித்து கொடுத்தவர்தான் இந்த குன்ஹி கண்ணன்.

60 வயதான குன்ஹி கண்ணன், மைசூரில் உள்ள கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா நிறுவனத்தின் உரிமையாளார். இவர் மைசூரில் உள்ள National Institute of Engineering-ல் எலட்ரானிக் இஞ்ஜினியரிங் முடித்து, 1988ல் சிறிய அளவில் Kaynes என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனமானது,1996ல் பங்கு வர்த்தகத்தில் 3% வளர்ச்சியைக் கண்டது. இவரது மனைவி சவிதா ரமேஷ் இவரும் இந்நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார்.

சென்ற ஆண்டு இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் -3ல் , ரோவர் மற்றும் லேண்டர் இரண்டையும் இயக்குவதற்கு பயன்படுத்தப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்புகளை வழங்கியது கெய்ன்ஸ் டெக்னாலஜி நிறுவனம் தான்.

சந்திரயான் வெற்றியைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் 40 மடங்கு வளர்ச்சியடைந்தது. இந்நிறுவனத்தின் 64 சதவிகித பங்குகளை குன்ஹி கண்ணன் வசம் உள்ளது. இதனால் இவரின் நிகர சொத்தின் மதிப்பானது 1.2 பில்லியன் டாலராக உயர்ந்து உலக பணக்காரர்களின் தரவரிசை பட்டியலில் இவர் பெயரும் இடம்பெற்றுள்ளது.