புர்ஜ் கலிஃபா
புர்ஜ் கலிஃபா  முகநூல்
உலகம்

இனி புர்ஜ் கலிஃபா உலகின் உயரமான கட்டிடம் இல்லை - புதிய ரெக்கார்ட் படைக்கும் கட்டிடம் எங்கே?

PT WEB

உலகின் உயரமான கட்டிடமாக கருதப்படும் புர்ஜ் கலிஃபா இனி உயரமான கட்டிடமாக இருக்காது என கின்னஸ் ரெக்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அபுதாபியிலிருக்கும் 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலிஃபா, 14 வருடங்களுக்கும் மேலாக உலகின் உயரமான கட்டிடமாக பார்க்கப்படுகிறது. ஆறு வருடங்களுக்கு மேலாக இதன் கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில் 2010ம் ஆண்டு இந்த கட்டிடம் திறக்கப்பட்டது.

சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனை வளாகம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் அடங்கிய இந்த கட்டிடத்திற்கு போட்டியாக மற்றொரு கட்டிடம் சவுதி அரேயியாவில் கட்டப்பட்டு வருகிறது. ஜெதா டவர் அல்லது கிங்டம் டவர் என்றழைக்கப்படும் இந்த கட்டிடம் ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு கட்டப்பட்டு வருகிறது. அலுவகங்கள், ஆடம்பர குடியிருப்புகள், மருத்துவமனை வளாகங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டு வரும் இந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு உலகின் உயரமான கட்டிடத்தில் முதல் இடம்பெறும் என கின்னஸ் ரெக்காட்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

எண்ணெய் வர்த்தகத்தை பெரும்பாலும் நம்பிவந்த அரபு நாடுகள் தற்போது சுற்றுலாத்துறை, ஆடம்பர கட்டமைப்புகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் அதில் ஒரு முக்கிய நகர்வாக இந்த உயரமான கட்டிடங்கள் பார்க்கப்படுகின்றன.