சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரினால், ஏராளமான கட்டுமானங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. தலைநகர் டமாஸ்கஸில் சேதமடைந்துள்ள குடியிருப்புப் பகுதிகள், மக்கள் நடமாட்டம் இன்றி தென்படும் சாலைகள், புழுதி படர்ந்து காணப்படும் பகுதிகள் ஆகியவற்றின் பருந்துப் பார்வைக் காட்சிகள், நாட்டில் நிலவும் மோசமான சூழலை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கடந்த 8ஆம் தேதி, தலைநகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அதிபராக இருந்த அசாத், நாட்டை விட்டு வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து நாட்டில் 13 ஆண்டுகளாக நிலவி வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. போர் முடிந்தும், அதனால் ஏற்பட்ட வடுக்கள் ஆறாமல் இருப்பதை, இந்த காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.