model image x page
உலகம்

சுவிட்சர்லாந்து | பெண்கள் புர்கா அணிய தடை.. அமலுக்கு வந்த சட்டம்.. மீறினால் அபராதம்!

சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

Prakash J

சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

model image

சுவிட்சர்லாந்தில் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணிய தடை விதிப்பது குறித்து கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்ததால், இப்போது அந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்தச் சட்டத்தின்படி, விமானங்கள், தூதரக வளாகங்கள் ஆகிய இடங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தலங்களிலும், மசூதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக் கொள்ளலாம். மதரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக அவ்வாறு செய்யக்கூடாது. தடையை மீறுபவர்கள் உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த மறுத்தால் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை செலுத்த நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.