சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணியத் தடை!

ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணிய தடை
சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணிய தடைpt web

இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது புர்கா அணிவது வழக்கம். சில இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் புர்கா அணிவது கட்டாயம் என்ற சூழல் இருக்க, சில நாடுகள் புர்கா அணிய தடை விதித்து வருகிறது. அந்நாடுகளின் பட்டியலில் தற்போது சுவிட்சர்லாந்தும் இணைந்துள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் பெண்கள் தங்களது முகத்தை மறைக்க பயன்படுத்தும் புர்காக்களை அணிய அந்நாட்டு கீழ்சபை தடைவிதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. 151 - 29 எனும் பெரும்பான்மையுடன் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமானது ஏற்கெனவே மேலவையால் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணிய தடை
முகமது நபி குறித்த சர்ச்சை: இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு - இந்தியா விளக்கம்

இரு ஆண்டுகளுக்கு முன் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்புக்குப் பின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது அரசாங்கம் வெளியிட்ட முடிவுகளின் அடிப்படையில், 51.21% வாக்காளர்கள் இந்த முன்மொழிவை ஆதரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சட்டம் அமலுக்கு வந்தால், விளையாட்டு மைதானங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்கள் மூக்கு, வாய் மற்றும் கண்களை மூடுவதற்கு தடை ஏற்படும். ஆனால் வழிபாட்டு தலங்களில் இவைகளை அணிய தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இத்தடையை மீறுபவர்களுக்கு சுவிஸ் 1000 பிராங்குகள் (ரூ. 90,000 வரை) வரை அபராதம் விதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com