பிரபல அமெரிக்க நிறுவனமான ஸ்டார்பக்ஸின் தலைமை செயல் அதிகாரி பிரையன் நிக்கோல், கடந்த ஆண்டு 4 மாதங்களுக்கு மட்டும் 827 கோடி ரூபாய் ஊதியமாக பெற்றுள்ளார்.
கடந்த செப்டம்பரில் பணியில் இணைந்த அவருக்கு நான்கே மாதங்களில் இந்த ஊதியத்தை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. கூகுளின் தலைமை நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் ஆகியோரது ஊதியத்தை விட இது அதிகமாகும்.
பிரையன் நிக்கோல் கலிபோர்னியாவில் இருந்து ஸ்டார்பக்ஸ் தலைமை அலுவலகம் உள்ள சியாட்டல் வரை செல்ல தனி ஜெட் விமானம், வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளையும் அந்நிறுவனமே ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.