கருணா அம்மான் எக்ஸ் தளம்
உலகம்

இலங்கை | பழைய வழக்குகளைத் தோண்டியெடுக்கும் புதிய அரசு.. கருணா அம்மானுக்கு சிக்கல்?

இலங்கை அதிபர் அநுரா குமார திசநாயக்க தலைமையிலான ஜே.வி.பி ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், கிடப்பில் போடப்பட்டிருந்த பழைய வழக்குகள் மீதான விசாரணை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

PT WEB

இலங்கை அதிபர் அநுரா குமார திசநாயக்க தலைமையிலான ஜே.வி.பி ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், கிடப்பில் போடப்பட்டிருந்த பழைய வழக்குகள் மீதான விசாரணை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, 2006ஆம் ஆண்டு இலங்கை மட்டக்களப்பில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத், அடையாளம் தெரியாத ஆயுதக்குழுக்களால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.

இலங்கையைப் பரபரப்புக்குள்ளாக்கிய இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் மீது இலங்கை அரசாங்கம் விசாரணயைத் தொடங்கியிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக, நேற்று கொழும்பு குற்றப்புலனாய்வு அலுவலகத்தில் கருணா அம்மான் பலமணிநேரம் விசாரிக்கப்பட்டார்.

கருணா அம்மான்

தொடக்கத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத் தளபதியாக இருந்த கருணா அம்மான், இறுதிப்போரின்போது அந்த அமைப்பிலிருந்து தனியாகப் பிரிந்து சென்று விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்ததோடு, அவர்களுக்கு எதிராகவே செயல்பட்டார். போர் முடிவுக்குப் பின்னர் ராஜபக்சே அரசாங்கத்தில் அமைச்சர் பதவியையும் பெற்றார்.

தற்போது கருணா அம்மான் மீது பல்வேறு கோணங்களில் இலங்கை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல, தமிழ்ப் பத்திரிகையாளர் தராக்கி சிவராமின் மரணம், ஏப்ரல் 21 நடந்த குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணையும் இலங்கை அரசால் முடுக்கிவிடப் பட்டிருக்கிறது.