US troops  file photo
உலகம்

உலக ராணுவச் செலவு | 2.89 ட்ரில்லியன் டாலராக உயர்வு!

உலகளாவிய இராணுவச் செலவினங்கள் அதிகமானதைத் தொடர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இராணுவச் செலவினங்களின் பங்கு 2.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

PT WEB

2025-ஆம் ஆண்டில் உலகளாவிய இராணுவச் செலவினம் 2,887 பில்லியன் டாலரை எட்டியது; இது 2024-ஆம் ஆண்டைவிட உண்மையான மதிப்பில் 2.9 சதவீதம் அதிகமாகும். அமெரிக்காவில் இராணுவச் செலவினம் குறைந்த நிலையில், ஐரோப்பாவில் 14 சதவீதமும், ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியங்களில் 8.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.

Chinese Troops

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இராணுவச் செலவினத்தில் முன்னிலையில் உள்ள முதல் மூன்று நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை இணைந்து மொத்தம் 1,480 பில்லியன் டாலரைச் செலவிட்டுள்ளன; இது உலகளாவிய மொத்தச் செலவினத்தில் 51 சதவீதமாகும். உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ராணுவத்துக்கான பங்கு இரண்டரை சதவீதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா 95,400 கோடி டாலர்களுடன் முதலிடத்தில் நீடித்தாலும் இது செலவினத்தை குறைத்துள்ளது. போர்ச் சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாகவே நாடுகள் ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டுவருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.