ஹார்முஸ் நீரிணை | ’ஈரானின் பொருளாதார அணு ஆயுதம்..’ எச்சரிக்கும் அமெரிக்கா!
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை ஈரான் புறக்கணித்தது. மற்றுமொரு தருணத்தில் அமெரிக்காவும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் கப்பல்களைக் குறிவைத்தும், கைப்பற்றியும் அச்சுறுத்தி வருகின்றன. இதனால் உலகளாவிய அளவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் அதிகரித்து வரும் பதற்றங்களைத் தணிப்பதற்காக, ஈரான் இடைத்தரகர்கள் வழியாக அமெரிக்காவிற்கு 3 நிபந்தனைகளை முன்மொழிந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முன்மொழிவு, ’முதலில் பேச்சுவார்த்தை, பிறகு அணு ஆயுதப் பேச்சு’ என்ற அணுகுமுறையை மையமாகக் கொண்டுள்ளது.
ஈரானின் 3 நிபந்தனைகள்
1. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் நடவடிக்கைகளை நிறுத்துதல் மேலும் பகைமை ஏற்படாமல் இருப்பதற்கான உத்தரவாதம்
2. முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் கடல்வழிப் பாதையை மீண்டும் திறப்பதும், அமெரிக்கக் கடற்படைத் தடையை நீக்குவதும் ஆகும்.
3.அணுசக்திப் பேச்சுவார்த்தைகளை ஒத்திவைத்தல்: முதல் 2 நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரை, ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் யுரேனியம் செறிவூட்டல் குறித்த பேச்சுவார்த்தைகளை ஒத்திவைத்தல்.
மேலும் பேசிய அவர், ஈரானில் அவர்கள் விளம்பரப் பலகைகளை அமைத்து, உலகின் மொத்த ஆற்றல் வளங்களில் 25 சதவீதத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம் என்று கூறுகிறார்கள். ஹார்முஸ் நீரிணையை பிணைப்பொருளாகப் பயன்படுத்துபவர்கள் கையில் ஓர் அணு ஆயுதம் கிடைத்தால் நிலைமை எப்படி இருக்கும் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள் என்றும் அணுசக்தி தடை செய்யப்படாவிட்டால் ஹிஸ்புல்லா குறித்தோ, ஹமாஸ் குறித்தோ அல்லது ஈராக்கில் செயல்படும் ஷியா போராளிக் குழுக்கள் குறித்தோ நம்மால் எதையும் செய்ய இயலாது. ஏனெனில், கையில் அணு ஆயுதத்தை வைத்துக்கொண்டு, எங்களை யாரும் நெருங்க முடியாது என்று சவால்விடும் நிலையில் அவர்கள் இருப்பார்கள் என்றும் மார்கோ ருபியோ கூறினார்.
அவர்கள் ஈரானை மட்டுமே ஆதிக்கம் செலுத்த முற்படவில்லை, அவர்கள் அண்டை நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்த முற்படுகிறார்கள். அவர்கள் கையில் அணு ஆயுதம் இருந்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், ஈரானின் உச்ச தலைவர் எப்படி இருக்கிறார், எங்கு இருக்கிறார் என்பது குறித்து இன்னும் சோதிக்கப்படவில்லை, அவர் இன்னமும் வெளியில் வந்து பேசவில்லை, அவர்கள் இன்னும் குழப்பத்திலேயே இருக்கிறார்கள் என்றார் .

