யூன் சுக் இயோல் எக்ஸ் தளம்
உலகம்

தென்கொரியா | பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!

தென்கொரியாவில் பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை கைது செய்ய சியோல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Prakash J

தென்கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, நாட்டுமக்களிடம் உரையாற்றியபோது, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தன. 14ஆம் தேதி இதற்கான வாக்குப்பதிவு தோல்வியில் முடிந்தாலும், 27ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அவருக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

யூன் சுக் இயோல்

இதைத் தொடர்ந்து இடைக்கால அதிபராகச் செயல்பட்ட ஹான் டக்-சூவுக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதற்காக முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சியோல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், யூன் சுக் இயோலை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் மீதான நீதிமன்ற நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.