தென்கொரியாவில் உறக்கம் போட்டி web
உலகம்

தென்கொரியாவில் விநோத போட்டி: நிம்மதியாக உறங்கினால் பரிசு!

தென்கொரியா மக்கள் குறைவாகவே தூங்கும் நிலை இருப்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விநோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டது.

Rishan Vengai

தூக்கமின்மை மற்றும் வேலைப்பளுவால் அவதிப்படும் தென்கொரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சியோல் மாநகராட்சி ஹான் நதிக்கரையில் ஆழ்ந்த உறக்கப் போட்டி நடத்தியது. நூற்றுக்கணக்கானோர் வித்தியாசமான உடைகளில் பங்கேற்று நிம்மதியாக உறங்கினர்.

அதிகப்படியான வேலைப்பளு மற்றும் தூக்கமின்மையால் தவிக்கும் தென்கொரியர்களுக்காக, சியோல் மாநகராட்சி விநோதமான ஆழ்ந்த உறக்கப் போட்டியை நடத்தியது.

உறங்கும் போட்டி

ஹான் நதிக்கரையில் நடைபெற்ற இப்போட்டியில், நூற்றுக்கணக்கானோர் விதவிதமான உடைகளில் பங்கேற்று நிம்மதியாக உறங்கினர். பங்கேற்பாளர்களின் இதயத் துடிப்பைக்கொண்டு அவர்களின் உறக்கத்தின் தரம் கணக்கிடப்பட்டது. இதில் 80 வயதுமுதியவர் முதலிடம் பிடித்தார்.

மிகக்குறைந்த நேரம் உறங்கும் மக்களாக தென்கொரியர்கள் உள்ள நிலையில், விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.