US Destroyes Iran dominance Reuters
உலகம்

ஈரான் இனி அவ்வளவுதான் : தகர்ந்த மாபெரும் ஆயுதம்.. திட்டமிட்டு தாக்கிய அமெரிக்கா!

அமெரிக்காவுடனான போரில் ஈரானின் மாபெரும் ஆயுதத்தை அமெரிக்கா தகர்ந்துள்ளதால் இந்த போர் விரைவில் முடிவடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Praveen Joshva L

ஈரானின் தாக்குதலால் வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்கா ராணுவத்தை குவித்து ஈரானின் தாக்குதலை குறைத்ததால், போரின் முடிவுக்கு அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல், ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர்.

எனினும் இந்த இழப்பில் இருந்து மீண்ட ஈரான் அமெரிக்க ராணுவ தளங்கள் இருந்த வளைகுடா நாடுகள் மீது கடுமையாக தாக்குதலை நடத்தியது. அதோடு முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக தடமான ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் முடக்கியது. மேலும் அந்த வழியே செல்லும் கப்பல்கள் தகர்க்கப்படும் என்றும் சில கப்பல்களை தகர்ந்தும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இதனால் அந்த வழியே எந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் நடக்காமல் உலகளாவிய பொருளாதாரம் முடங்கி பல நாடுகள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டன.

மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றை அனுப்பிவந்த சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், இராக், பக்ரைன் ஆகியவற்றின் ஏற்றுமதி அடியோடு சரிந்தது. இந்த நாடுகள் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ள நிலையில், இது அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும் இந்த வளைகுடா நாடுகள் அதிகம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இந்த போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரக்கூடிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. போரின் ஈரானின் கை வலுவாக இருக்க ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாடு முக்கிய காரணமாக விளங்கியது.

ஆனால் தற்போது போர் தொடங்கி 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாடு பெருமளவில் குறைந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறித்த தரவுகளை கூறும் 'கேப்ளர்' (Kpler) அறிக்கையின்படி, செப்டம்பர் மாதத்தில் நாளொன்றுக்கு 1.65 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் இது போருக்கு முன்னர் வளைகுடா நாடுகள் ஏற்றுமதி செய்ய அளவுக்கு இணையானதும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரான் தவிர்த்த பிற அரபு நாடுகளின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி போருக்கு முந்தைய நிலைக்குச் மீண்டுள்ளது என்றும் பார்க்கப்படுகிறது.

ஹோர்முஸ் பகுதியில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை அதிகரித்து அந்த பகுதியில் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு வான்வழி ஆதரவு அளிப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகள் வணிக கப்பல்களை குறிவைத்து ஏவப்படும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தாக்கி அழித்து வருகின்றன. மேலும் ஈரானின் ஏவுகணை தளங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகள் ஈரானின் தாக்குதல் திறனையும் குறைந்துள்ளன.

ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாடே இந்த போரில் ஈரானின் பலமாக பார்க்கப்பட்டுள்ள நிலையில், அதனை தற்போது ஈரான் இழந்துள்ளது அந்நாட்டுக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த போரில் விரைவில் அமெரிக்காவின் கை ஓங்கி ஈரான் போர் நிறுத்தத்துக்கு வரக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக பார்க்கப்படுகிறது.