ஆசியப் பேரிடர்கள்  pt web
உலகம்

தென்கிழக்கு ஆசியாவின் புயல், மழை, வெள்ளம்... பேரிடர்கள் காரணமாக 1,350 பேர் உயிரிழப்பு.!

கடந்த ஓரிரு வாரங்களாகத் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகள் புயல், பெருமழை, வெள்ளம் ஆகியவற்றால் கடும் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இது குறித்து ஒரு தொகுப்பைப் பார்க்கலாம்.

PT WEB

ஒரே சமயத்தில் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகள் புயல், பெருமழை, வெள்ளம் ஆகியவற்றால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளன. இவற்றில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு இந்தோனேசியாதான்.

இந்தோனேசியா வெள்ளம்

இந்தோனேசியாவின் மக்கள்தொகை 28 கோடியே 57 லட்சம். தற்போதைய பெருவெள்ளத்தில் இந்தோனேசியாவில் 32 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 708 பேர் உயிரிழந்துள்ளனர். 504 பேரைக் காணவில்லை. 2,600 பேர் காயமடைந்துள்ளனர். சாலைகள் கடுமையாகச் சேதமடைந்திருப்பதால் இன்னும் பல இடங்களை மீட்புக் குழுவினரால் அடைய முடியாத நிலை உள்ளது. சென்யார் புயல்தான் இந்தோனேசியாவில் விளைந்த நாசத்துக்குக் காரணம்.

அடுத்ததாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இலங்கை. இலங்கையின் மக்கள்தொகை 2 கோடியே 20 லட்சம். தற்போதைய புயல், பெருமழை, வெள்ளம், நிலச்சரிவில் சேதமான வீடுகளின் எண்ணிக்கை மட்டும் 30 ஆயிரம்.

இலங்கை வெள்ளம்

இலங்கையில் 460 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் உணவுக்குத் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டிட்வா புயல் இலங்கையைச் சூறையாடிவிட்டுச் சென்றிருக்கிறது.

தாய்லாந்தும் பெருமழை வெள்ளத்தில் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. தாய்லாந்தின் மக்கள்தொகை 7 கோடியே 17 லட்சம். சமீபத்திய வெள்ளத்தில் 181 பேர் உயிரிழந்துள்ளனர். 39 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.

தாய்லாந்து வெள்ளம

தென்கிழக்கு ஆசியாவில் இந்த இயற்கைப் பேரிடர்களால் கிட்டத்தட்ட 1,350 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடு, வாழ்வாதாரம் ஆகியவற்றை இழந்துள்ளனர். பலர் உணவின்றித் தவிக்கின்றனர். இப்படியாக, புயல், பெருமழை, வெள்ளம், நிலச்சரிவுகள் என்பவை தென்கிழக்கு ஆசியாவில் தொடர்கதையாகிவருகின்றன.