சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்துப் பேசினார்.
ரியாத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இருநாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் முக்கியமாக, சவுதி அரேபியாவுக்கு 142 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ தளவாட தொகுப்பை விற்பது தொடர்பான ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் வெளிநாட்டுடன் அமெரிக்கா செய்துள்ள மிகப்பெரிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் இதுவாகும். இதற்கிடையே, முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சிரியா மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் தளர்த்துவதாக அறிவித்தார். அதிபரின் அறிவிப்பை வரவேற்று, சவுதி பட்டத்து இளவரசர் உள்ளிட்ட அனைவரும் எழுந்துநின்று கைதட்டி, ஆரவாரம் செய்தனர்.
ட்ரம்ப் அறிவிப்பைத் தொடர்ந்து, சிரியாவின் தற்காலிக அதிபர் அகமது அல் ஷரா, ரியாத்திற்கு வந்து, ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன