Saudi Arabia x page
உலகம்

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை.. காரணம் என்ன?

வளைகுடா நாடுகளில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதன் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், சவூதி அரேபியா ஒரேநாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

Prakash J

வளைகுடா நாடுகளில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது. அதன் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், சவூதி அரேபியா ஒரேநாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சவூதி அரேபியாவின் தெற்கு பிராந்தியமான நஜ்ரானில், போதைப் பொருள் கடத்தியதற்காக நான்கு சோமாலியர்களும் மூன்று எத்தியோப்பியர்களும் தூக்கிலிடப்பட்டதாக சவூதி பத்திரிகை நிறுவனமான (SPA) தெரிவித்துள்ளது.

Saudi Arabia

மேலும், சவூதி நபர் ஒருவர் தனது தாயைக் கொன்றதற்காக தூக்கிலிடப்பட்டதாக SPA தெரிவித்துள்ளது. நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து, சவூதி அரேபியா 230 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது என்று AFP அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த மரண தண்டனைகளில் பெரும்பாலானவை போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் எனவும், அதன்படி 154 பேர் மரண தண்டனைக்கு ஆளாகியிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

மேலும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வேகம், கடந்த ஆண்டு 338 மரண தண்டனை வழக்குகளின் சாதனையை முறியடிக்கும் பாதையில் நாட்டை அழைத்துச் செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. AFP கணக்கெடுப்பின்படி, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 2022இல் 19 பேருக்கும், 2023இல் இரண்டு பேருக்கும், 2024இல் 117 பேருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Saudi Arabia

ஆய்வாளர்கள் இந்த அதிகரிப்பை, 2023இல் தொடங்கப்பட்ட நாட்டுப் போதைப் பொருட்களுக்கு எதிரான போர் காரணமாக இணைக்கின்றனர். முதலில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் இப்போதுதான் அவர்களின் சட்ட நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகளுக்குப் பிறகு தூக்கிலிடப்படுகிறார்கள். போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் மரண தண்டனையைப் பயன்படுத்துவதை சுமார் மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்த பிறகு, 2022ஆம் ஆண்டின் இறுதியில் சவூதி அரேபியா போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கான மரணதண்டனையை மீண்டும் தொடங்கியது. பொது ஒழுங்கைப் பராமரிக்க மரண தண்டனை அவசியம் என்றும், மேல்முறையீடு செய்வதற்கான அனைத்து வழிகளும் தீர்ந்த பின்னரே பயன்படுத்தப்படுகிறது என்றும் சவுதி அதிகாரிகள் கூறுகின்றனர்.