saudi arabia lifting its 73 year ban on alcohol
சவூதி அரேபியாஎக்ஸ் தளம்

2034 கால்பந்து உலகக் கோப்பை | 73 ஆண்டுகால தடை.. மதுவிலக்கை நீக்கும் சவூதி அரேபியா?

பாரம்பரியமான நடைமுறைகளைப் பின்பற்றி சவூதி அரேபியா அரசானது, கடந்த 73 ஆண்டுகாலமாக இருக்கும் மது விலக்கு ரத்து செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on

உலகில் இஸ்லாமியர்களின் கோட்டையாக விளங்கும் சவூதி அரேபியாவில், மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி மது அருந்துபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. பாரம்பரியமான நடைமுறைகளைப் பின்பற்றி சவூதி அரேபியா அரசானது, கடந்த 73 ஆண்டுகாலமாக இருக்கும் மது விலக்கு ரத்து செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2034ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கு சவூதி அரேபியா தயாராகி வருகிறது. இதையடுத்து, முக்கியமான சுற்றுலாத் தலங்களில் மதுபானங்களின் விற்பனையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் இதைச் செயல்படுத்தப்போவதாகக் கூறப்படுகிறது.

saudi arabia lifting its 73 year ban on alcohol
சவூதி அரேபியாஎக்ஸ் தளம்

முகமது பின் சல்மான் தலைமையின்கீழ் சவூதி அரேபியா, சமீபகாலமாகச் சில மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. எரிபொருளை மட்டும் நம்பியிருந்தால் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என்ற கொள்கையிடன் பல்வேறு மாற்றங்களையும் இவர் செய்து வருகிறது. அந்த வகையில், சவூதி நாட்டில் வாழும் வெளிநாட்டுத் தூதர்களுக்காக 2024ஆம் ஆண்டு ரியாத்தில் உள்ள தூதர்களுக்கான குடியிருப்பில் முதல் மதுபான கடை திறக்கப்பட்டது.

saudi arabia lifting its 73 year ban on alcohol
மதுபான கடையைத் திறக்கும் சவூதி அரேபியா... ஆனால்?

இங்கு முஸ்லிம் அல்லாத தூதர்கள் மட்டும் ஒயின், இரண்டு வகையான பியர்களை மட்டும் வாங்கிக் கொள்ளும் வகையில் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதிலும் குறிப்பிட்ட அளவிலான மதுபான பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாகனம் ஓட்ட அனுமதி, போட்டிகளில் பங்கேற்க அனுமதி ஆண் துணையில்லாமல் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது போன்ற தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், மது விலக்கு ரத்து செய்யப்படும் திட்டம் நடைமுறைக்கு வந்தால், சவூதி அரேபியாவில் கடந்த 73 ஆண்டுகளாக இருந்த தடை முடிவுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், அந்த நாட்டு அரசு இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றே தெரிவித்துள்ளது. மது விலக்கு தொடரும் என்றே தெரிவித்துள்ளது. அந்த நாடு ஷரியா சட்டத்தைப் பின்பற்றியதால் மதுபானத்துக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com