சவுதி அரேபியா முகநூல்
உலகம்

பேருந்து - லாரி பயங்கர மோதல் | சவுதி அரேபியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியான 9 இந்தியர்கள்!

சவுதி அரேபியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்தியர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.

PT WEB

சவுதி அரேபியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்தியர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஜிஷான் நகரில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டது. பேருந்துடன் கனரக லாரி மோதிய விபத்தில், மொத்தம் 15 பேர் மரணமடைந்த நிலையில், அதில் 9 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததை அறிந்து வேதனை அடைந்ததாக கூறியிருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கும் இந்திய தலைமை அதிகாரியிடம் பேசியதாகவும், அவர் முழு உதவிகளை செய்து கொடுப்பார் என்றும் கூறியுள்ளார்.