கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிரேசிலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர் நூதன முறையில் பரிசுகளை விநியோகித்து வருகிறார்.
ரியோ டி ஜெனிரோ நகரின் தீயணைப்புத்துறை தலைவராக இருக்கும் ஃபாப்ரிசியா ஸ்கார்பி என்பவர், தண்ணீரில் செல்லும் ஜெட் ஸ்கை எனப்படும் வாகனத்தில் பரிசு பொருட்களை விநியோகிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிசுப் பொருட்களை கொண்டுசெல்லும் பணியை தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செய்து வரும் தீயணைப்புத்துறை வீரர் ஃபாப்ரிசியா ஸ்கார்பிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.