russia-ukraine war x page
உலகம்

தொடரும் மோதல் | மேலும் ஒரு பகுதியைக் கைப்பற்றிய ரஷ்யா.. தாக்குதலை எதிர்கொள்ளும் உக்ரைன்!

உக்ரைனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மேலும் ஒரு பகுதியை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளதாக, ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Prakash J

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கியுள்ளது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

russia-ukraine war

இந்த நிலையில், போக்ரோவ்ஸ்க் நகரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நோவோட்ராய்ட்ஸ்க் கிராமத்தை ரஷ்யப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கார்கிவ், டோனட்ஸ்க், ஜபோரிஜியா, கெர்சான் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி, ராணுவ தளவாடங்களையும், 61 ட்ரோன்களையும் தகர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இருநாட்டு எல்லைப் பகுதியில் உள்ள 133 இடங்களில் ரஷ்யப் படைகளை எதிர்கொண்டு வருவதாக உக்ரைன் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதல்களை 16 முறை உக்ரைன் ராணுவத்தினர் முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.