silver x page
உலகம்

தங்கத்திற்குப் போட்டி.. மின்னல் வேகத்தில் விலையேறும் வெள்ளி!

தங்கத்தைப்போல வெள்ளியும் சிறந்த முதலீட்டுப் பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

PT WEB

தங்கத்தைப்போல வெள்ளியும் சிறந்த முதலீட்டுப் பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

தங்கத்தின் விலையேற்ற வேகம் அண்மைக்காலமாக பிரமிக்கவைக்கும் வகையில் உள்ள நிலையில், வெள்ளி அதைc சத்தமின்றி முந்தியுள்ளது. 2025ஆம் ஆண்டில் தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடு 49% லாபத்தை தந்த நிலையில், வெள்ளி 56% லாபம் தந்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் 29ஆம் தேதி 7 ஆயிரத்து 80 ரூபாயாக மட்டுமே இருந்த ஒரு கிராம் தங்கம் விலை, தற்போது 10ஆயிரத்து 700 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது, ஒரே ஆண்டில் தங்கம் விலை கிராமுக்கு 3 ஆயிரத்து 560 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

silver

வெள்ளி விலை கடந்தாண்டு செப்டம்பர் 29ஆம் தேதி கிராமுக்கு 101 ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது 160 ரூபாயாக அதிகரித்துள்ளது. உலகளவில் பெருகிவரும் நிலையில் அதன் முக்கிய மூலப்பொருளாக இருக்கும் வெள்ளிக்கு தேவை அதிகரித்து வருவதாக சந்தை நிபுணர்கள் விளக்குகின்றனர். சீனா பிரம்மாண்டமான அளவில் சோலார் செல்களை உற்பத்தி செய்து தள்ளுவதும் வெள்ளிக்கான தேவையை அதிகரித்துள்ளது. மேலும் ஏஐ தொழில்நுட்பத்தின் எழுச்சியால் தகவல் சேமிப்புக்கான டேட்டா சென்டர்களும் உலகெங்கும் அதிகரித்து வருகின்றன.

அதில் பன்படுத்தப்படும் மின்னணு சாதனங்களிலும் வெள்ளி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நகர்வுகள் உலக பொருளாதாரத்தில் குழப்பம் ஏற்படுத்தியுள்ள நிலையில் தங்கம், வெள்ளியில் செய்யப்படும் முதலீடு முன்பைவிட அதிகரித்துள்ளது. அதே நேரம் வெள்ளியின் தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாத நிலை உள்ளது. தொடர்ச்சியாக 5ஆவது ஆண்டாக வெள்ளியின் உற்பத்தி குறைந்துள்ளது.

silver

2024 நிலவரப்படி உலகின் வெள்ளி தேவை 1,164 மில்லியன் அவுன்சாக இருந்த நிலையில் ஆயிரத்து 15 மில்லியன் அவுன்ஸ் மட்டுமே கிடைத்துள்ளது. அதாவது 148.9 மில்லியன் அவுன்ஸ் பற்றாக்குறை இருந்தது. இதுபோன்ற சூழலில் தங்கத்தைப் போன்று வெள்ளியும் லாபகரமான முதலீடு என்ற பெயரை பெற்றுள்ளது. பங்குச்சந்தைகள், வங்கி டெபாசிட்டுகள், தங்கம் வரிசையில் வெள்ளியையும் ஒரு முதலீட்டு அம்சமாக பார்க்கவேணடும் என்பதே நிபுணர்களின் ஆலோசனையாக உள்ளது.