வாஷிங்டனில் ஹில்டன் அரங்கில் ட்ரம்ப், மெலனியா, துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பங்கேற்ற இரவு விருந்தின்போது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் உலகளவில் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆறு முறை சுடப்பட்டதாக கூறப்படும் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படாமல் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அவர்களை வெளியேற்றினர். இந்த சம்பவத்தை பிரதமர் மோடி கண்டித்து, ட்ரம்ப் உள்ளிட்டோர் நலமாக இருப்பதில் நிம்மதி தெரிவித்தார்.
வாஷிங்டனில் ஹில்டன் விருந்தினர் அரங்கில் நடைபெற்ற இரவு விருந்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப், மெலனியா, துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தபோது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆறு முறை சுட்டதாக கூறப்படும் சூட்டில், பாதுகாப்பு அதிகாரிகள் டிரம்ப் உள்ளிட்ட முக்கிய நபர்களை உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டனில் உள்ள ஹில்டன் விருந்தினர் அரங்கில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செய்தியாளர் சந்திப்புக்கு முன் நடைபெற்ற இந்த விருந்தின்போது அனைவரும் அங்கு கீழே அமர்ந்திருக்க, ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா உள்ளிட்ட முக்கியமானவர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர்.
அப்போது திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க ஒரு கணம் அங்கிருந்த அனைவரும் மிரண்டனர். ஆறு முறை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாக சொல்லப்படும் நிலையில் உடனடியாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் டொனால்ட் ட்ரம்பை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மேலும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் பிரதமர் மோடி, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. ட்ரம்ப், அவரது மனைவி, துணை அதிபர் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பியதை அறிந்து நிம்மதி அடைந்தேன். ட்ரம்ப் உள்ளிட்டோர் தொடர்ந்து பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்க எனது வாழ்த்துகளை கூறுகிறேன். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை” என பதிவிட்டுள்ளார்.