பிக்கில்பால் எக்ஸ் தளம்
உலகம்

பிக்கில்பால்| உலகில் அதிகம் பேர் விளையாடும் விளையாட்டு..

உலகில் அதிகம் பேர் விளையாடும் விளையாட்டாக பிக்கில்பால் உள்ளது.

PT WEB

கிரிக்கெட், பேட்மிண்டன் ஆகிய விளையாட்டுகளுக்கு மத்தியில், தற்போது உலக அளவில் ஒரு விளையாட்டு பிரபலமடைந்து வருகிறது. பேட்மிண்டன் கோர்ட்டில், டேபிள் டென்னிஸுக்கு பயன்படுத்தப்படும் பேடில் பேட்டையும், பிளாஸ்டிக் பந்தையும் பயன்படுத்தி ஆடும் விளையாட்டு தான் பிக்கில்பால். கடந்த 1965ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜோல் பிரிட்சர்ட் என்ற எம்பி, தனது நண்பர்கள் பில் பெல் மற்றும் பார்னி மெக்கல்லம் ஆகியோருடன் சேர்ந்து, தங்கள் குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக பிக்கில்பால் விளையாட்டை கண்டுபிடித்துள்ளார்.

பிக்கில்பால்

அப்படி கோடைக்கால விடுமுறையின்போது, கொல்லைப்புற பொழுதுபோக்கு விளையாட்டாக தொடங்கிய பிக்கில்பால், தற்போது உலக அளவில் அதிகமானோரால் விளையாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் உருவான இந்த விளையாட்டு, இந்தியா, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது.