westjet
westjet twitter
உலகம்

அதிகமுறை Toiletக்கு சென்ற பெண் பயணி.. விமானத்தில் இருந்து வெளியேற்றம்

Prakash J

சமீபகாலமாக, உலகம் முழுவதும் விமானத்தில் ஏற்படும் அசெளகரியங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சிறுநீர் கழிக்கும் விவகாரம், அவசர கதவு திறப்பு, பாலியல் தொந்தரவு, ஊழியர்களைத் தாக்குதல் எனப் பல்வேறு சம்பவங்களும், விமானத்தில் ஏற்படும் கோளாறுகளும் அதற்கு உதாரணமாய் உள்ளன. அந்த வகையில், பெண் பயணி ஒருவர் அடிக்கடி விமானத்தின் கழிப்பறையைப் பயன்படுத்தியதற்காக இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோனா சியு என்ற பெண் இந்த மாத தொடக்கத்தில், மெக்சிகோவில் இருந்து புறப்படும் வெஸ்ட் ஜெட் (WestJet) விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். விமானம் புறப்படுவதற்கு முன்பு ஜோனாவிற்கு வயிற்றுப் பிரச்னை இருந்ததால் அவர் விமான கழிவறையை அதிகமுறை பயன்படுத்தியுள்ளார். இதனால் விமான ஊழியர்கள் ஜோனாவை விமானத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றியுள்ளனர்.

இதையும் படிக்க: ரூ.2,900 கோடி அபராதம்.. 3 ஆண்டுகள் தடை.. அடிமேல் அடி வாங்கும் ட்ரம்ப்.. தேர்தலில் பின்னடைவா?

இந்த சம்பவம் குறித்து ஜோனா சியு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வெஸ்ட் ஜெட் விமானத்தில் இருந்து தம்மை அவசரமாக வெளியேற்றினர். அப்போது, தமது பணத்தை விமான நண்பர்களிடமே கொடுத்துவிட்டு இறங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மறுமுறை விமானத்தில் பயணிக்கவோ அல்லது ஹோட்டலில் தங்கவைப்பதற்கான எந்த உறுதிமொழியையும் விமான நிறுவனம் தரவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தம்மிடம் பணம் இல்லாததால், 20 கிலோ மீட்டர் உள்ள ஹோட்டலுக்குத் திரும்பிச் செல்வதற்கான கார் கட்டணத்தைக் கட்டச் சொல்லி விமான நிறுவன மேற்பார்வையாளரிடம் கேட்டதுபோது அவர் மறுத்ததாகவும், இதை வீடியோவாக எடுத்தபோது, அதை தாங்கள் நீக்காவிட்டால் மறுநாள் விமானைத்தில் பயணிக்க முடியாது என மிரட்டியதாகவும் அதில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பலர் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அதில் ஜோனாவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜோனா சியுவின் இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, வெஸ்ட்ஜெட் (WestJet) நிறுவனம் அதற்குப் பதிலளித்துள்ளது. ’தாங்கள் கூறியிருக்கும் கருத்துக்கு மதிப்பளிக்க விரும்புகிறோம். உங்களுடைய மொபைல் எண்ணைத் தமக்குத் தெரிவிக்கவும். நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டு உதவுகிறோம்’ எனப் பதிலளித்துள்ளது.