ஷபாஸ் ஷெரீப் எக்ஸ் தளம்
உலகம்

பாகிஸ்தானை உலுக்கிய குண்டுவெடிப்பு.. இந்தியா மீது பாக். பிரதமர் குற்றச்சாட்டு .. உடனே வந்த பதிலடி!

பாகிஸ்தானில் நடந்த தற்கொலைக் குண்டு வெடிப்பில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது...

விமல் ராஜ்

பாகிஸ்தானில் நடந்த தற்கொலைக் குண்டு வெடிப்பில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது...

பாகிஸ்தானில் நடந்த தற்கொலைக் குண்டு வெடிப்பில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா கொடுத்த பதிலடி தான் கவனம் ஈர்த்து வருகிறது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் அருகே நேற்று நடந்த தற்கொலைக் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தற்போது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இது போன்ற தற்கொலைப்படை தாக்குதல்களை தெஹ்ரீக் -இ-தொய்பா தலிபான் அமைப்புகள் மேற்கொண்டு வருவதால் இந்த தாக்குதல்களிலும் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கனிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு தலிபான்களின் ஆட்சி அமைந்த பிறகு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கனிஸ்தான் அரசு ஆதரவு அளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. அதே போல இந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் குற்றம் சாட்டியுள்ளார்..

ஷபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் அருகே நடந்த தற்கொலை குண்டு வெடிப்புக்கு இந்தியா தான் காரணம் என்றும் பாகிஸ்தானின் ஒற்றுமையயை சீர்குலைக்கும் வகையில் இந்தியா இது போன்ற பயங்கரவாத தாக்குதலைகளை நடத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமின்றி தன் பினாமியாக இருக்கும் ஆப்கானிஸ்தான் மூலமாக இந்த தாக்குதல்களை இந்தியா நடத்தி வருவதாக கூறினார்.

இவரது குற்றசாட்டை இந்தியா முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்வால், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிபின் இந்த குற்றச்சாட்டு முகாந்திரமற்றது. அந்த நாட்டின் ராணுவம் அரசியல் சாசனத்தை சீர்குலைத்து அதிகாரத்தை கைப்பற்றுவதால் எழுந்துள்ள குழப்பத்தை திசை திருப்ப இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இது அந்த நாட்டின் வழக்கமான உத்திதான் என குறிப்பிட்டுள்ளார்.