ஜென் சி என்றாலே சமூகப் பொறுப்பற்ற தலைமுறையினர் எனப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் நடத்திய போராட்டங்கள் சமூகத்தில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஜென் சி என்றாலே சமூகப் பொறுப்பற்ற தலைமுறையினர் எனப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் நடத்திய போராட்டங்கள் சமூகத்தில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நேபாளம், மெக்சிகோ மற்றும் பெருபோன்ற நாடுகளில் 2025இல் நிலவிய ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக 'ஜென்-சி' தலைமுறை இளைஞர்கள் நடத்திய போராட்டங்கள் உலகத்தையே உலுக்கின. குறிப்பாக, நேபாளத்தில் செப்டம்பர் மாதம் சமூகவலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் வெடித்த போராட்டம், பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் பதவி விலகலுக்கும், ஒரு பெண் தலைமை நீதிபதி தலைமையில் இடைக்கால அரசு அமையவும் வழிவகுத்தது.
இதேபோன்று, மெக்சிகோவில் மேயர் ஒருவரின் கொடூரப் படுகொலைக்கு பின் பாதுகாப்பு கோரி இளைஞர்கள் வீதிக்கு வந்தனர். பெருவில் பொருளாதாரச் சரிவு மற்றும் ஊழலுக்கு எதிராக 'ஜென்-சி' தலைமுறையினர் தீவிரபோராட்டங்களை முன்னெடுத்தனர். டிஜிட்டல் தளங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு, 'ஒன் பீஸ்' anime கதாபாத்திரத்தின் கடற்கொள்ளையர் கொடியை அடையாளமாக பயன்படுத்திய இவர்களது போராட்டங்கள், அதிகாரத்தில் உள்ள முதிய தலைமுறைக்கு எதிரான இளைஞர்களின் ஒரு புதிய டிஜிட்டல் புரட்சியாக பார்க்கப்படுகின்றன.