நேபாள வெள்ளம் X
உலகம்

நேபாள பேரழிவு | 5 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை.. யாரும் கவனிக்காத 2 முக்கிய அறிக்கைகள்!!

னால் இந்தப் பேரழிவு திடீரென நடந்ததல்ல... இதுபோன்ற அபாயம் வரப்போகிறது என்று 5 மாதங்களுக்கு முன்பே இரண்டு முக்கிய அறிவியல் அறிக்கைகள் எச்சரித்திருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Premkumar S

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். ஆயிரக்கணக் கணக்கானோர் காணவில்லை. இதனால், உயிரிழப்புகள் மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஆனால் இந்தப் பேரழிவு திடீரென நடந்ததல்ல... இதுபோன்ற அபாயம் வரப்போகிறது என்று 5 மாதங்களுக்கு முன்பே இரண்டு முக்கிய அறிவியல் அறிக்கைகள் எச்சரித்திருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ICIMOD

இந்த இரண்டு அறிக்கைகளையும் வெளியிட்டது, I.C.I.M.O.D. எனப்படும் சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம். இந்த அமைப்பு இந்து குஷ் இமயமலைப் பகுதியின் பனிப்பாறைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் உலக பனிப்பாறைகள் தினத்தை முன்னிட்டு இந்நிறுவனம் தனித்தனியாக 2 ஆய்வறிக்கைகளை வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையில், 1975 முதல் இந்து குஷ்-இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் 27 மீட்டர் வரை பனித் தடிமனை இழந்துள்ளன. மேலும், 1990 முதல் 2020 வரை பனிப்பாறைகளின் பரப்பளவில் சுமார் 12 சதவீதமும், பனிக்கட்டிகளின் சேமிப்பில் 9 சதவீதமும் குறைந்துள்ளது. குறிப்பிடும்படியாக, 2000-ம் ஆண்டுக்குக்குப் பிறகு பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதனால், உயரமான மலைப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் நிலையிழந்து, எந்த நேரத்திலும் உடைந்து வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயம் அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இமயமலை

மேலும், இந்த அறிக்கைகளில் இன்னொரு முக்கிய எச்சரிக்கையும் இருந்தது. 2020-கள் இந்து குஷ் இமயமலைப் பகுதியை பாதுகாக்க மிகவும் முக்கியமான காலம் என்றும், காலநிலை மாற்றத்தால் இதுபோன்ற பேரழிவுகள் அடிக்கடி நடக்கக்கூடும் என்றும் கூறப்பட்டது. அதற்காக நேபாளம், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இணைந்து பனிப்பாறைகள் மற்றும் அபாய ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்தச்சூழலில் தான், இப்போது ஏற்பட்ட இந்த பேரழிவு, அந்த எச்சரிக்கைகள் வெறும் கணிப்புகள் அல்ல என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் இமயமலையில் எவ்வளவு ஆபத்தான நிலையை உருவாக்கியுள்ளது என்பதற்கும், முன்கூட்டிய எச்சரிக்கைகளை புறக்கணிப்பதன் விலையும் இந்த நேபாள பேரழிவு நினைவூட்டுகிறது.