இமயமலை Reuters
உலகம்

இமயமலையில் பனிச்சரிவு.. சுமைதூக்கும் தொழிலாளர்கள் 15 பேர் உ*ரிழப்பு!!

நேபாளத்தில் ஹிம்லுங் ஹிமால் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 15 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க்கிறது.

Premkumar S

நேபாளத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள மானாங் மாவட்டத்தில், 7 ஆயிரத்து 126 மீட்டர் உயரம் கொண்ட ஹிம்லுங் ஹிமால் மலையின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, 15 நேபாள தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தொழிலாளர்கள் வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் வருவதற்கு முன்பாக, முகாமில் கூடாரங்கள் அமைத்தல் மற்றும் பாதைகளுக்கான கயிறுகளைக் கட்டுதல் போன்ற ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இமயமலை

நேபாள தேசிய மலை வழிகாட்டிகள் சங்கத்தின் தலைவர் துல் சிங் குருங் தகவலின்படி, வியாழக்கிழமை பனிக்கு அடியிலிருந்து 8 உடல்களும், அதற்கு முன்னர் வாரத் தொடக்கத்தில் 7 உடல்களும் என மொத்தம் 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட உடல்கள் ஹெலிகாப்டர் மூலம் நேபாளத் தலைநகர் காட்மாண்டுவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. விபத்து நடந்த நேரத்தில் வெளிநாட்டு மலையேற்றப் பயணிகள் யாரும் அந்த முகாம் பகுதிக்கு வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.