மியான்மர் நாட்டில் அமலில் இருக்கும் அவசர நிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக முறையில் மீண்டும் தேர்தலை நடத்துவதிலிருந்து விதிவிலக்கு அளிப்பதற்கான இந்த அவசர நிலை, நேற்று முன்தினம் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து அவசர நிலையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி மாவோங் ஹ்லைங் அறிவித்தார். மியான்மிரில் 2021ஆம் ஆண்டு ஜனநாயகமுறையில் தேர்வு செய்யப்பட்ட ஆங் சான் சூகி அரசை கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டது. ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.