இன்று மதுரை செல்லும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்... கோயில் வளாகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு தீவிரம்...
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட திடலில் வைக்கப்பட்ட பெரியார் படம் அகற்றம்... பெரியார் படம் இருந்த இடத்தில் தாமரை சின்னத்தை ஒட்டிய பாஜகவினர்...
பெரியார் படத்தை எடுத்ததுபோல அண்ணா, ஜெயலலிதா படங்களையும் எடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் வேண்டுகோள்...
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு... உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக ஜவாஹிருல்லா பேட்டி...
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கியது திமுக... புதுச்சேரியில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதாக காதர் மொய்தீன் பேட்டி...
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை... காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா இடம் தருவதாக முதல்வர் கூறியுள்ளதாக செல்வப்பெருந்தகை பேட்டி...
காங்கிரஸ் - தவெக பேச்சு என்பது வதந்தி என செல்வப்பெருந்தகை திட்டவட்டம்... காங்கிரஸ் - திமுக கூட்டணி உறுதியாக செல்வதாகவும் விளக்கம்...
சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனு சமர்பிக்க திமுக தலைமை கூடுதல் கால அவகாசம்... வரும் 6ஆம் தேதி வரை மனுக்களை வழங்கலாம் என அறிவிப்பு...
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு என மல்லை சத்யா அறிவிப்பு... சென்னை எழும்பூரில் நடைபெற்ற திராவிட வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு...
உண்மையான ஆன்மிகவாதிகள் விரும்பும் அரசு, திராவிட மாடல் அரசுதான்... சென்னை மயிலாப்பூரில், கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை...
தஞ்சையில் மார்ச் 4இல் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்த திட்டம்... கூட்டத்துக்கு அனுமதி கோரி தஞ்சை மாவட்ட எஸ்பியிடம் நிர்வாகிகள் மனு...
மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும்... போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்...
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்... மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மழை பெய்யும் எனவும் கணிப்பு...
ஈரான் மீது கூட்டாக தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அமெரிக்கா... பல்வேறு நகரங்கள் மீது குண்டு வீசப்பட்டதால் நீடிக்கும் பதற்றம்...
ஈரானின் உச்சத் தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு... வரலாற்றின் மிகக் கொடிய மனிதர்களில் ஒருவர் என்றும் பதிவு...
ஈரானின் உச்சத் தலைவர் காமேனி உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை... இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரபரப்பு அறிவிப்பு...
தெஹ்ரானில் உள்ள அயத்துல்லா அலி காமேனியின் குடியிருப்பு வளாகத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்... புகை எழுந்ததாக செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு..
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட ராணுவ தளபதி முகமது பாக்பூர் உயிரிழந்ததாக தகவல்... உச்ச தலைவர் காமேனி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை விளக்கம்...
ஈரான் தலைமை மதகுரு காமேனி முதல் உயர்மட்ட தளபதிகளே அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதலின் இலக்கு எனத் தகவல்... அமெரிக்கா ஆப்ரேஷன் எபிக் ஃப்யூரி என்றும், இஸ்ரேல் ஆப்ரேஷன் லயன்ஸ் ரோர் என்றும் பெயரிட்டன...
அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பயங்கர சத்தம்... உலகளவில் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்...
ஈரானின் மினாப் நகரில் உள்ள இரண்டு பள்ளிகள் மீது ஏவுகணை தாக்குதல்... இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் மாணவிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்...
இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான்... டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களில் சைரன் ஒலி எழுப்பி மக்களை எச்சரிக்கும் இஸ்ரேல் அரசு...
மேற்காசிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்... அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதலுக்கு ஈரான் தரப்பில் இருந்து பதிலடி...
ஈரானின் பதிலடி தாக்குதலில் துபாயில் உள்ள பாம் ஜுமெய்ரா ஹோட்டல் பாதிப்பு... துபாயில் அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள்; பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலையை பாதித்துள்ளதாக தகவல்...
போர் பதற்றம் காரணமாக வான்பரப்பை மூடிய வளைகுடா நாடுகள்... விமானங்கள் ரத்தால் துபாய் வழியாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவிற்கு செல்லும் பயணிகள் கடும் அவதி...
உலகின் மிகப் பிஸியான விமான மையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையம் மூடல்... விமான போக்குவரத்துத்துறையில் பெரும் பாதிப்பு; லட்சக்கணக்கான பயணிகள் தவிப்பு...
ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் பதற்றம்... வான்வெளி முற்றிலுமாக மூடப்பட்டதால் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட விமானங்கள் ரத்து...
இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகள் வழியாக இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து... டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை விமான நிலையங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவு...
போர் பதற்றம் காரணமாக விமானங்கள் ரத்தானதால் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்... மத்திய அரசு தங்களை உடனடியாக மீட்க வேண்டுமென இந்திய மாணவி கண்ணீர் மல்க கோரிக்கை...
ஈரான், சவுதி அரேபியா, குவைத் நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு அவரச உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம்... விழிப்புடன் இருக்கவும், பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தல்...
வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இந்தியத் தூதரக அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை... தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அவசர உதவி எண்களும் அறிவிப்பு...
ஈரான் ராணுவம், பாதுகாப்பு படை சரணடையாவிட்டால் முற்றிலும் அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி... ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்பு...
தகர்க்கப்படுமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை... ஈரான் மக்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளும் சூழலை இஸ்ரேல் உருவாக்கும் என பெஞ்சமின் நெதன்யாஹூ உறுதி...
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம்... பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வை எட்ட வேண்டுமெனவும் வலியுறுத்தல்...
மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு உள்ள ராணுவ தளங்கள் குறித்த தகவல்கள் வெளியாகின... 8 நிரந்தர ராணுவ தளங்களும், அணுகக்கூடிய அளவில் 11 ராணுவ தளங்களும் உள்ளதாக மதிப்பீடு...
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் பகைமை நிலைக்கு முன்பு கூட்டாளிகளாக இருந்ததாக தகவல்... அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் உறவு சிதைந்ததே தற்போதைய பதற்றத்திற்கு காரணம்...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கூட்டுத் தாக்குதலுக்கு வரவேற்பு... லண்டனில் வசிக்கும் ஈரானியர்கள் உற்சாக கொண்டாட்டம்...
காமேனி அரசுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் ஈரானியர்கள் போராட்டம்... ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டுமென முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பு...
மேற்காசிய நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்... ஒவ்வொரு குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே தலையாயக் கடமை எனவும் கருத்து.