Israel and US Possible Move to Remove Iran Ruling
ட்ரம்ப், அலி கமேனிஎக்ஸ் தளம்

அணு ஆயுதமா.. அலி கமேனியா? அமெரிக்கா குறிவைப்பது எது? ஈரானில் தொடர் தாக்குதல்!

ஈரான் மீது போரைத் தொடங்கியிருக்கும் இஸ்ரேலும், அமெரிக்காவும் அதன் ஆட்சியதிகாரத்தை அகற்ற நினைப்பதாக சமிக்ஞைகள் தெரிவிக்கின்றன.
Published on

இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது ’ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' என்ற பெயரில் சரமாரியாகத் தாக்குலைத் தொடங்கின. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 30 இடங்களை குறி வைத்து இஸ்ரேல், இன்று ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால் அங்கு உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறஈரான் மீது போரைத் தொடங்கியிருக்கும் இஸ்ரேலும், அமெரிக்காவும் அதன் ஆட்சியதிகாரத்தை அகற்ற நினைப்பதாக சமிக்ஞைகள் தெரிவிக்கின்றன.

போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் அமெரிக்கா படையினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். மதுரோ கைது நடவடிக்கைக்குப் பிறகு துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிகஸ் வெனிசுலாவின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். இருப்பினும், வெனிசுலா நிர்வாகத்தை அதிபர் ட்ரம்பே கட்டுப்படுத்துகிறார்.

Israel and US Possible Move to Remove Iran Ruling
அலி கமேனிராய்ட்டர்ஸ்

இந்த நிலையில், ஈரான் மீது போரைத் தொடங்கியிருக்கும் இஸ்ரேலும், அமெரிக்காவும் அதன் ஆட்சியதிகாரத்தை அகற்ற நினைப்பதாக சமிக்ஞைகள் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணம், இன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பெரும்பான்மையான இடங்களில் அந்நாட்டின் உட்சபட்ச தலைவர் அலி கமேனியின் வீடு மற்றும் அலுவலகமும் ஆகும். இருப்பினும், தாக்குதல் நடந்த நேரத்தில் கமேனி தெஹ்ரானில் இல்லை என்றும், ஏற்கெனவே அவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனின் இல்லமும் குறிவைக்கப்பட்டது. இருப்பினும், எந்த மூத்த அரசு அதிகாரிகளும் இதுவரை படுகொலை செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Israel and US Possible Move to Remove Iran Ruling
ஈரான் மீது போர்| சேர்ந்து தாக்கும் இஸ்ரேல், அமெரிக்கா.. சுரங்கத்தில் பதுங்கிய அலி கமேனி!

இதற்கிடையே, ஈரானின் கமேனி ஆட்சிக்கு எதிராக மக்கள் கடந்த ஆண்டு இறுதியில் போராட்டத்தில் குதித்தனர். ஈரானில் பொருளாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பாக டிசம்பர் 28இல் தொடங்கிய போராட்டம், கமேனி ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான பரந்த போராட்டமாக உருமாறியது. இதில் அமெரிக்கா தலையீடு இருப்பதாகக் குற்றஞ்சாட்டிய கமேனி, அதற்கு எதிராக ஒருபோதும் தாம் பின்வாங்கப் போவதில்லை என எச்சரித்திருந்தார். தவிர, போராட்டத்தையும் ராணுவம் மூலம் அடக்கினார். இந்தப் போராட்டத்தில் 2,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், அணுசக்தி ஒப்பந்தத்திற்கான போராட்டம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் வெனிசுலாவின் மதுரோவைப் போன்று அலி கமேனி ஆட்சியதிகாரத்தை அழிக்க வேண்டும் என அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டம் தீட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Israel and US Possible Move to Remove Iran Ruling
அலி கமேனி, நெதன்யாகு, ட்ரம்ப்எக்ஸ் தளம்

மதுரோவைப்போல், அலி கமேனியும் அமெரிக்காவிற்கு அடிபணிந்து செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. அதன், ஆதங்கமே தற்போதைய தாக்குதலாக மாறியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, ”ஈரானின் மகத்தான, பெருமைமிக்க மக்களுக்கு, உங்கள் சுதந்திரத்தின் நேரம் நெருங்கிவிட்டது... நாங்கள் முடித்ததும், உங்கள் அரசாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். தலைமுறைகளாக இதுவே உங்களுக்கு ஒரே வாய்ப்பாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார். அதேபோல் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும், “அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் ஈரானிய மக்கள் தங்கள் தலைவிதியை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் சூழலை உருவாக்கக்கூடும்” எனத் தெளிவுபடுத்தியிருந்தார். அதனடிப்படையில் பார்க்கப் போனால், அவர்கள் இருவரும் அலி கமேனியின் ஆட்சிக்குக் குறி வைத்திருப்பதாக வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

Israel and US Possible Move to Remove Iran Ruling
ராணுவத் தளங்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்.. அமெரிக்காவை அலறவிட்ட ஈரான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com