நேபாளம் எக்ஸ் தளம்
உலகம்

நேபாளம் | மீண்டும் மன்னராட்சி முறை.. வெடித்த போராட்டம்!

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி முறைக்குத் திரும்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Prakash J

நேபாளத்தில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த மன்னராட்சி, கடந்த 2008இல் நிகழ்ந்த மக்கள் போராட்டங்களின் காரணமாக அகற்றப்பட்டு மக்களாட்சி அமைந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் அந்நாட்டில் மக்களாட்சி தினம் கொண்டாடப்பட்டபோது, ‘நேபாளத்தைப் பாதுகாத்து தேச ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு தமக்கு ஏற்பட்டுள்ளது’ என்று அந்நாட்டின் முன்னாள் அரசா் ஞானேந்திர ஷா தெரிவித்தாா். இதையடுத்து அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்துவதற்கு தொடா்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து, மன்னர் ஞானேந்திர ஷாவின் ஆதரவாளர்கள் மீண்டும் மன்னராட்சி அமைய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.

நேபாளம்

இதை வலியுறுத்தி தலைநகர் காட்மாண்டு, பொக்காரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேரணி உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ராஷ்ட்ரீய பிரஜா தந்திர கட்சியும் மன்னராட்சியை மீட்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. முன்னதாக இதுகுறித்து நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஒலி, ”நேபாளத்தின் அரசமைப்புச் சட்டம் மன்னராட்சியை அங்கீகரிக்கவில்லை. மன்னராட்சியை மக்கள் தூக்கி எறிந்து பல காலமாகிவிட்டது. எனவே, ஒருவா் மீண்டும் மன்னராவது சாத்தியமற்றது. அரசாட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதே ஞானேந்திர ஷாவின் நோக்கம் என்றால், அவா் தோ்தலில் போட்டியிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.