மலையேற்ற வீராங்கனைகள்
மலையேற்ற வீராங்கனைகள்எக்ஸ் தளம்

நேபாளம் | எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் வெளிநாட்டு மலையேற்ற வீரர்களுக்கான கட்டணம் ரூ.13 லட்சமாக உயர்வு

நேபாள மலையேற்ற வீரர்களுக்கு கட்டணம் 75 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.5 லட்சமாக உயர்வு
Published on

நேபாளத்தில், எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறுவதற்கான கட்டணம் 36 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீசன் காலமாக அறியப்படும் மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில், வெளிநாட்டு மலையேற்ற வீரர்களிடம் வழக்கமாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவது வழக்கம்.

தற்போது அந்த கட்டணம் 13 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், செப்டம்பர் முதல் நவம்பர்
வரை வெளிநாட்டு மலையேற்ற வீரர்களுக்கான கட்டணம் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
டிசம்பர் முதல் பிப்ரவரி வரையும், ஜூன் முதல் ஆகஸ்ட் வரையும்
வசூலிக்கப்படும் கட்டணம் 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக
அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நேபாளத்தை சேர்ந்த மலையேற்ற வீரர்களுக்கான கட்டணம் 75 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. நேபாள நாட்டின் அமைச்சரவை, இந்த கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 1ஆம் தேதி
முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com