Bank of America  Reuters
உலகம்

Microsoft, விமானசேவை.. வரிசையில் தற்போது அமெரிக்க வங்கிகள்.. சைபர் தாக்குதலா?

அமெரிக்காவில் வங்கிகள் ஆன்லைன் சேவையில் பிரச்னை ஏற்பட்டிருப்பது சைபர் தாக்குதலா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.

PT WEB

மைக்ரோசாஃப்ட் மற்றும் விமான சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளுக்கு பின், அமெரிக்க வங்கிகளின் ஆன்லைன் சேவைகளிலும் சிரமம் ஏற்பட்டது. Zelle சேவையில் தாமதம் ஏற்பட்டது.

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துவதில் வாடிக்கையாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஜேபி மோர்கன் சேஸ் (JPMorgan Chase) வங்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிற வங்கிகளின் பணப் பரிவர்த்தனைகளிலும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Chase bank

திங்கள்கிழமை ஏற்பட்ட இந்தப் பிரச்சினையால், சேஸ் வங்கி (Chase) பேங்க் ஆஃப் அமெரிக்கா, (Bank of America) வெல்ஸ் பார்கோ, (Wells Fargo) ட்ரூயிஸ்ட் (Truist) உள்ளிட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களும் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாகப் புகார் தெரிவித்தனர். குறிப்பாக, Zelle எனப்படும் பணப் பரிமாற்றச் சேவையைப் பயன்படுத்தி பணம் அனுப்புவதிலும், பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

இதுகுறித்து விளக்கமளித்த சேஸ் வங்கி, இது சைபர் தாக்குதல் அல்ல என்றும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில பணப் பரிவர்த்தனைகள் வழக்கத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குகளையும் பணத்தையும் தொடர்ந்து அணுக முடியும் என்றும், பிரச்சினையைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.

wells Fargo Bank

அதேபோல், அமெரிக்க வங்கிகளின் கூட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான Zelle சேவையும் முழுமையாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், சில வங்கிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பப் பிரச்சினைகளால் பணப் பரிமாற்றத்தில் தாமதம் ஏற்படலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மைக்ரோசாஃப்ட் சேவைகளில் ஏற்பட்ட முடக்கம், அமெரிக்க விமானப் போக்குவரத்தில் ஏற்பட்ட பாதிப்பு என அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது வங்கிச் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.