\
flight
flight Reuters

USA-ஐ உலுக்கிய பகீர் சம்பவம்! விமானங்கள் தரையிறங்கியது ஏன்?

சமீபத்தில், அமெரிக்காவின் வான்வழியில் பறக்க இருந்த விமானங்கள் தரையிறக்கப்பட்ட விவகாரத்தில், என்ன தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்ற விவரங்களை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
Published on: 
Summary

அமெரிக்காவில் தொழில்நுட்பக் கோளாறால் 4700-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, 10000-க்கும் மேற்பட்டவை தாமதமாகின. பழைய தொழில்நுட்பங்களை மாற்றும் பணிகளின் போது ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தியாளர் - கார்த்திகேயன்

அமெரிக்காவின் விமான போக்குவரத்துத்துறை FAA என்ற அமைப்பு தான் கட்டுப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்க நேரப்படி பிற்பகல் 4 மணிக்கு ஒரு அவசர உத்தரவை பிறப்பித்து இருந்தது. அதன்படி, விமான நிலையங்களில் புறப்பட தயாராக இருந்த அனைத்து விமானங்களும், தரையிறக்கப்பட்டது. இதனால், சுமார் 4 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. இந்த சம்பவத்தை தொடர்ந்து, உலக அளவில் விமான போக்குவரத்தின் பயண அட்டவணைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

ஆனால், ஏற்கனவே வானில் பறந்துக் கொண்டு இருந்த சுமார் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விமானங்கள், பாதுகாப்பாக தொடர்ந்து இயக்கப்பட்டு, தங்களது சேருமிடங்களை அடைய அனுமதிக்கப்பட்டன. பெரும் இணையவழித் தாக்குதலின் அச்சத்தால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் என்று, முன்பு தகவல் பரவி வந்தது. ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்த அந்நாட்டு அதிகாரிகள், இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்று விளக்கம் அளித்தனர்.

flight
flightReuters
flight
அமெரிக்காவில் 11000 விமானங்கள் முடக்கம்.. ஈரானின் சைபர் தாக்குதலா? நாடே அதிர்ச்சி!

இந்நிலையில், இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏன் ஏற்பட்டது என்றும், உள்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் இருந்த பழைய செம்பு கம்பி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களை நவீன ஃபைபர் மற்றும் ஐ.பி. ரூட்டர்களுக்கு மாற்றும் பணிகள் நடந்து வந்தன. பராமரிப்பு பணியின்போது அல்லது புதிய ரூட்டரை இணைத்தபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ரூட்டர்கள் அளவுக்கு அதிகமான தரவுகளை பெற தொடங்கியுள்ளன.

இதனால், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் விமானிகளுடன் தொடர்பு கொள்ளும் ரேடியோ அலைவரிசைகளிலும், ரேடார் திரைகளிலும் கடுமையான நிலையற்றத்தன்மை ஏற்பட்டது. இதுவே, இந்த பிரச்சனைக்கு மிகமுக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அமெரிக்காவின் பல பழமையான விமானப் போக்குவரத்துத் தொழில்நுட்பக் கட்டமைப்பை நவீனப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளது. இதற்கு கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான உள்கட்டமைப்பு மேம்பாடுகள் தேவைப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

flight
நீண்ட ஆயுள்.. குரங்கு ரத்தம் மூலம் இளமையை மீட்கும் புதினின் அதிரடி முயற்சி!