வரி விதிப்பு முகநூல்
உலகம்

வரி விதிப்பை அமல்படுத்தும் அமெரிக்கா... எதிர்கொள்ள தயார் என்ற மெக்சிகோ!

அமெரிக்காவின் வரி விதிப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக மெக்சிகோ தெரிவித்துள்ளது.

PT WEB

வரி விதிப்பை அமெரிக்கா அமல்படுத்தும்பட்சத்தில், அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளுடன் மெக்சிகோ தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷென்பாம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா எந்த முடிவை எடுத்தாலும் அதை எதிர்கொள்ள மெக்சிகோ தயாராக இருப்பதாக கூறியுள்ள அதிபர் கிளாடியா, மெக்சிகோவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வழங்கிய காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், இன்று வரி விதிப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், மெக்சிகோ அதிபர் இவ்வாறு கூறி உள்ளார்.